வெளியானது அருண் விஜய் - ஹரி ப்ராஜக்ட் குறித்த முக்கிய அறிவிப்பு!
சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து வெளிவர வரிசை கட்டி காத்துள்ளன.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் விரைவில் படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் - ஹரி கூட்டணியில் வெளிவரவுள்ள படம் குறித்து முக்கிய அறிவிப்பை அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அருண் விஜய்க்கு நிறைய படங்கள் வரிசையில் வெளிவர காத்துள்ளன. பார்டர், சினம், அக்னி சிறகுகள், சூர்யா தயாரிக்கும் படம், பாக்ஸர், ஹரி இயக்கும் படம் என படங்கள் வரிசையில் உள்ள நிலையில் அருண் விஜய்யின் ரசிகர்கள் வரவிருக்கும் படங்களை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

படப்பிடிப்பு தொடக்கம்
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் 3ம் தேதி தொடங்கப்பட்டு கொரோனா இரண்டாம் அலை, இயக்குனர் ஹரி கொரோனாவால் பாதிப்படைந்ததன் காரணமாக படப்பிடிப்பு நின்று போனது. இதன் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

அருண் விஜய் ட்வீட்
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கியுள்ளது. இது குறித்து அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சக்திவேல், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

வலுவான பட்டாளம்
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வலுவான நடிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது இந்த படக்குழு.


Click it and Unblock the Notifications











