எமோஷனல் கேரக்டர்.. கோபக்கார போலீஸ் இன்ஸ்பெக்டர்.. 'சினம்' படத்தில் அருண்விஜய் இப்படித்தான்!
சென்னை: சினம் படத்தில் கோபக்கார போலீஸ் இன்ஸ்பெக்டராக அருண் விஜய் நடிக்கிறார் என இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே முடக்கிப் போட்டிருக்கிறது. இதன் பாதிப்பால் மக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ரீரெக்கார்ட்டிங்
கொரோனா தொற்று காரணமாக, சினிமா படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தியேட்டர்களும் திறக்கப்படவில்லை. படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டும், அரசு காட்டியுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்த படங்களுக்கு, டப்பிங், ரீரெக்கார்ட்டிங் உள்ளிட்ட தங்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்து வருகின்றனர்.

அருண் விஜய் டப்பிங்
இந்நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்திலும், உற்சாகம் பொங்க தீவிரமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகிறது சினம் படக்குழு. இதுபற்றி இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கூறியதாவது: படத்தின் ஹீரோ அருண் விஜய் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார். தற்போது மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை தொடங்க இருக்கிறோம்.

இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட்
சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரில் அருண் விஜய்யின் ஆங்கார தோற்றம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் என்கிற கேரக்டரில் அருண் விஜய் நடிக்கிறார். அவரது கேரக்டர் எமோஷனலானது. அதே நேரத்தில் கோபம் கொள்ளும் கேரக்டர். அவரது கோபத்தைச் சூழ்நிலைகள் தீர்மானிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

பாலக் லால்வாணி
இது திரில்லர் படமென்றாலும் குடும்பங்களை கவரும் பல உணர்ச்சிப் பூர்வமான தருணங்களும், நேர்மறை விசயங்களும் நிறைய இருக்கிறது. இவ்வாறு கூறினார். இதில் அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். காளிவெங்கட் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
மூவிஸ் ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர். விஜயகுமார் படத்தைத் தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











