பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்!

Recommended Video

விழித்துக்கொண்ட அக்னி சிறகுகள்.. ஐரோப்பா பறக்கும் படக்குழு | Agni Siragugal

சென்னை: "நோ பெயின் நோ கெயின்" என்ற பழமொழிக்கு கோலிவுட்டில் சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களை வெற்றிக்கு விதையாக்கி ஜெயித்துக் காட்டி வருகிறார்.

வரும் நவம்பர் 19ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ள அருண் விஜய்யை வி மேகஸின் கெளரவித்து அதன் நவம்பர் மாத அட்டைப் படத்தை அலங்கரிக்க செய்துள்ளது.

பாடி பில்டிங்

பாண்டவர் பூமி உள்ளிட்ட அருண் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் சாஃப்ட் ஹீரோவாக சாக்லெட் பாயாக அருண் விஜய் நடித்திருப்பார். ஆனால், என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு ஹேண்ட்ஸம் ஹல்க்காக மாறியுள்ளார். அதற்கு காரணம் அவரது பாடி பில்டிங் தான்.

போலீஸ், வில்லன், டான், மாஸ் ஹீரோ என எந்த கதாபாத்திரம் ஆனாலும், இப்போது அருண் விஜய் அசால்ட்டாக நடித்து விட்டு போக அவருடைய பாடி பில்டிங் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பிறந்த நாள்

பிறந்த நாள்

1977ம் ஆண்டு பிறந்த அருண் விஜய்க்கு வரும் நவம்பர் 19ம் தேதியுடன் 42 வயது நிறைவடைகிறது. நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய்யின் குடும்பமே சினிமா குடும்பமாக இருந்தாலும், அருண் விஜய் தனது விடா முயற்சியானால், அவர்கள் அனைவரையும் தாண்டி பெரிய இடத்துக்கு உயர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

மாஃபியா

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாஃபியா படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 19ம் தேதி அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மாஃபியா படத்தில் இருந்து ஸ்பெஷல் அப்டேட் வெளியாகுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வி மேகஸின்

பிரபல ஃபேஷன் மாத இதழான We Magazine இந்த நவம்பர் மாத அட்டைப் படத்தில் நடிகர் அருண் விஜய்யின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது. அதற்காக சமீபத்தில், பிரத்யேக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. பாடி பில்டிங் செய்து உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்துள்ள அருண் விஜய், வி மேகஸின் அட்டைப்படத்தில் அட்ராசிட்டி செய்கிறார்.

அவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் பாக்ஸர் படத்திற்காகவும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X