vanangaan - ப்ளானை மாற்றிய வணங்கான் பாலா.. பாடாய் படும் அருண் விஜய்?

சென்னை: Vanangaan (வணங்கான்) வணங்கான் படத்தை பாலாவே தயாரித்துவரும் சூழலில் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டோமோ என அருண் விஜய் நினைத்துவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சேது,நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலா. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்திருக்கும் அவர் சமீபகாலமாக சில பிரச்னைகளில் சிக்கி தவித்துவருகிறார். விக்ரம் மகனை வைத்து இயக்கிய வர்மா படத்தை தயாரிப்பு தரப்பு கிடப்பில் போட்டது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை என சுற்றிலும் பிரச்னைகள்தான்.

 Arun Vijay is thinking that he is unnecessarily trapped in the Vanangaan Movie

வணங்கான்:

இப்படிப்பட்ட சூழலில் தனக்கு நந்தா, பிதாமகன் மூலம் பெரும் அடையாளத்தை கொடுத்ததால் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் ஷூட்டிங்கும் இரண்டு ஷெட்யூல்கள் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென படத்திலிருந்து சூர்யா விலகினார். அவர் விலகியதை அடுத்து கீர்த்தி ஷெட்டியும் விலகினார்.

அருண் விஜய் என்ட்ரி:

கடைசியாக இயக்கி வெளிவந்த நாச்சியார், வர்மா ஆகிய படங்கள் படுதோல்வியை சந்திக்க வணங்கான் மூலம் மீண்டும் நிரூபிக்க காத்திருந்த பாலாவுக்கு சூர்யாவின் விலகல் கொஞ்சம் அதிர்ச்சியையே கொடுத்தது. இருப்பினும் மனம் தளராத பாலா அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை முதலிலிருந்து தொடங்கினார். ஹீரோயினாக ரோஷினி பிரகாஷை கமிட் செய்தார். அதுமட்டுமின்றி பாலாவே படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

 Arun Vijay is thinking that he is unnecessarily trapped in the Vanangaan Movie

விறுவிறு ஷூட்டிங்:

சூர்யா நடித்த காட்சிகளில் அதே லொகேஷனில் அருண் விஜய்யை வைத்து மும்முரமாக ஷூட்டிங்கை நடத்தினார் பாலா. அதன்படி கன்னியாகுமரியில் முதல் ஷெட்யூல் முடிவடைந்ததை அடுத்து திருவண்ணாமலையில் அடுத்த ஷெட்யூல் நடந்தது. அருண் விஜய்யும் பெரும் அங்கீகாரத்திற்கு போராடுவதால் வணங்கானில் தீவிரமாக நடித்துவருகிறார். இருப்பினும் வணங்கான் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

கோவாவுக்கு பதில் மகாபலிபுரம்:

சூர்யா படத்திலிருந்து விலகுவதற்கு முன்னதாக கோவாவில் அவரை வைத்து ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தார் பாலா. இப்போது சூர்யா விலகியதை தொடர்ந்து கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த காட்சிகளை அருண் விஜய்யை வைத்து மகாபலிபுரத்தில் ஷூட் செய்துவருகிறாராம் பாலா. அதற்கு ஒரே காரணம் இந்தப் படத்தை பாலா தயாரிப்பதால்தானாம்.

சிக்கனம் காட்டும் பாலா சிக்கலில் அருண் விஜய்:

தன்னுடைய தயாரிப்பில் படம் உருவாவதால் கோவாவுக்கு சென்றால் நிச்சயம் செலவு அதிகம் ஆகும் என முடிவெடுத்து சிக்கன பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம். அதுமட்டுமின்றி ஏகப்பட்ட விஷயங்களுக்கும் பாலா சிக்கனமாகவே செலவு செய்துவருகிறாராம்.

எனவே தனக்கு பேசிய சம்பளமாவது ஒழுங்காக வந்துவிடுமா என்ற அச்சத்தில் இருக்கும் அருண் விஜய் தேவையில்லாமல் இந்தப் படத்தில் கமிட்டாகிவிட்டோமோ என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்தத் தகவலில் துளிக்கூட உண்மையில்லை என்றும் ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X