மீண்டும் இணையும் பார்டர் கூட்டணி... அருண் விஜய் உற்சாகம்

சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள படம் பார்டர்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் அறிவழகனுடன் அருண் விஜய் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

நடிகர் அருண் விஜய், சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இவரது தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்கள் சிறப்பானவை. ரசிகர்களை கட்டிப் போட்டவை. தனது தேர்ந்தெடுத்த படங்கள், சிறப்பான நடிப்பு உள்ளிட்டவற்றால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார் அருண் விஜய்.

திரையரங்கில் ரிலீஸ்

திரையரங்கில் ரிலீஸ்

இவரது நடிப்பில் சினம் மற்றும் பார்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அருண் விஜய் மற்றும் ரெஜினா கசான்ட்ரா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது பார்டர் படம். படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அறிவழகன். இந்த படம் முதலில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்டில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் ஒப்புதல்

அருண் விஜய் ஒப்புதல்

பாடர்டர் படத்தை தொடர்ந்து ஏவிஎம்மின் பிரமாண்ட வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார் இயக்குநர் அறிவழகன். இதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர்கள் தேர்வில் ஈடுபட்ட அறிவழகன் பல்வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்நிலையில் இதில் நடிக்க அருண் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பேசசுவார்த்தைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் -அறிவழகன் கூட்டணியில் பார்டர் படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது இந்த வெப் சீரிசிற்கும் தற்போதே எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X