வலிமையில் அருண் விஜய்யும் இருக்கிறாராம் மாமே!
Recommended Video
சென்னை: வலிமை படத்தில் நம்ம விக்டரும் இணைகிறாராம்.. அதாங்க அருண் விஜய்யும் தல அஜீத்துடன் இணைந்துள்ளாராம்.
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய், அஜீத்துக்கு நிகரான வேடத்தில் கலக்கி இருப்பார். அப்படம் அருண் விஜய்க்கு மிகப் பெரிய பிரேக்காகவும் அமைந்தது. அதன் பிறகு அவர் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜீத்துடன் இணையும் வாய்ப்பு அருண் விஜய்க்குக் கிடைத்துள்ளது. அதுதான் வலிமை. இப்படத்தில் அருண் விஜய் என்னவாக நடிக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பவர்ஃபுல்லான வேடமாக இருக்கும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
அடுத்து அருண் விஜய் குறித்த இன்னொரு செய்தி. அருண் விஜய் இப்போது படு பிசியாக இருக்கிறார். ஒருபக்கம் வலிமை.. இன்னொரு பக்கம் அக்னி சிறகுகள்.. அடுத்து மாபியா என அருண் விஜய் படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து ஹிட்டுகளைக் கொடுத்து தனக்குக் கிடைத்த பிரேக்கை தக்க வைக்கும் முனைப்புடன் அவர் உள்ளாராம்.
அருவி நாயகி அதிதி.. அப்படத்திற்குப் பிறகு பெரிதாக நடிக்கவில்லை. இப்போது லிஜி கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கிறார். ஹீரோயினாக இல்லையாம். முக்கிய வேடம்தானாம். இது கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய் டிவி ராமர் நடிக்கும் புதிய படம் போடா முண்டம்.. என்னடா இப்படி ஒரு தலைப்பா என்று கேட்கலாம்.. ஆனால் வச்சுட்டாங்களே.. நிக்கி கல்ராணியின் தங்கைதான் இப்படத்தில் ராமருக்கு ஜோடியாம். பெரும் பரபரப்பாக இப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது ராமர் ஆதரவு வட்டாரங்கள்.


Click it and Unblock the Notifications











