பிரபல ஒளிப்பதிவாளரின் தந்தை திடீர் மரணம்.. கடைசிவரை இருந்து.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய அருண்விஜய்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரான ராஜசேகரின் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற நடிகர் அருண்விஜய் கடைசி வரை அவருடன் இருந்து ஆறுதல் கூறினார்.
நடிகர் அருண் விஜய் இயக்குநர் அறிவழகனுடன் ஏற்கனவே குற்றம் 23 என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தற்போது இயக்குநர் அறிவழகனுடன் பார்டர் படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றி வருகிறார் அருண் விஜய்.

இரண்டு ஹீரோயின்கள்
இந்தப் படத்தில் நடிகைகள் ரெஜினா கெசண்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கின்றனர். பார்டர் படத்தை விஜய ராகவேந்திரா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ராஜசேகர் தந்தை மறைவு
இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை திடீரென காலமானார். இதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

கட்டியணைத்து ஆறுதல்
இறுதி வரை ராஜசேகருடன் இருந்த அருண் விஜய் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதனால் நெகிழ்ந்து போன ஒளிப்பதிவாளர் ராஜசேகர், தனது டிவிட்டர் பக்கத்தில் அருண் விஜய் குறித்து நெகிழ்ச்சி பதிவை ஷேர் செய்துள்ளார்.

இறுதிச்சடங்கு முடியும் வரை
அதாவது என் தந்தையின் இறுதிச்சடங்கு முடியும் வரை உடன் இருந்தீர்கள் டன் கணக்கில் நன்றி சார் என பதிவிட்டுள்ளார். அருண் விஜய் இறுதிச்சடங்கில் பங்கேற்றது, தனக்கு கட்டியணைத்து ஆறுதல் கூறிய வீடியோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராஜசேகர்.

நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸ்
அருண் விஜய் நடித்து வரும் பார்டர் படத்தின் தணிக்கை பணிகள் நிறைவடைந்து விட்டன. வரும் நவம்பர் 19ஆம் தேதி பார்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது. பார்டர் படத்தில் அருண் விஜய் முதல் முறையாக ராணுவ வீரராக நடிக்கிறார். மேலும் அவர் நடிக்கும் முதல் தேசப்பற்று படம் பார்டர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











