ஹரி இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் அருண் விஜய்.. படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என சூர்யா - ஹரி கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்க உள்ளதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

25 சதவீதம்..

25 சதவீதம்..

அருவா என்ற டைட்டிலில் உருவாகும் என்ற அந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கொரோனா ஊரடங்கால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் அருவா படத்தின் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாகவும் இயக்குநர் ஹரி அறிவித்தார்.

ஓடிடி தளத்தில்..

ஓடிடி தளத்தில்..

ஆனால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்ற சூர்யாவின் அறிவிப்பு வெளியானது. இதற்கு திரைத்துறையினர் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

மனஸ்தாபம்

மனஸ்தாபம்

இந்நிலையில் சூர்யா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஹரி. ஆனால் சூர்யா தனது முடிவை மாற்றிக் கொள்ளாததால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதனால் சூர்யாவை வைத்து இயக்க இருந்த அருவா படத்தை ஹரி கைவிடுவதாகவும், அந்தப் படத்தை அருண் விஜயை வைத்து இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இயக்குநர் ஹரி, நடிகரும் தனது மைத்துனருமான அருண் விஜயை இயக்கவுள்ளார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா

த்ரிஷா இல்லனா நயன்தாரா

இந்தப் படம் குறித்து தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள், இஃக்லூ படங்களை தொடர்ந்து Drumsticks productions சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் அவர்கள் தயாரிப்பில் டைரக்டர் ஹரி அவர்கள் இயக்கத்தில், அருண் விஜய் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை தயாரிக்கிறோம்.

மற்ற விபரங்கள்

மற்ற விபரங்கள்

இப்படம் அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும். பிப்ரவரி மாதம் 2021 படப்பிடிப்பு ஆரம்பமாகும். ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மற்ற விபரங்கள் விரைவில் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X