பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரியஸில் அருண் விஜய்யா!?

சென்னை: 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் படத் தயாரிப்பில் இருக்கும் முன்னனி நிறுவனம் ஏவிஎம்.

தமிழ்த் திரையுலகில் இருக்கும் பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம் முன்னனி நடிகர்கள் அனைவரையும் கொண்டு படம் தயாரித்துள்ளது.

சில வருடங்களாக படத் தயாரிப்பை நிறுத்தியிருந்த ஏவிஎம் பிரபல ஓடிடி நிறுவனத்துக்கான வெப் சீரியஸ் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அருண் விஜய்க்கு நிறைய படங்கள் வரிசையில் வெளிவர காத்துள்ளது. பார்டர், சினம், அக்னி சிறகுகள், சூர்யா தயாரிக்கும் படம், பாக்ஸர், ஹரி இயக்கும் படம் என படங்களின் வரிசையில் உள்ள நிலையில் அருண் விஜய்யின் ரசிகர்கள் வரவிருக்கும் படங்களை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆகஸ்ட் வெளியீடு

ஆகஸ்ட் வெளியீடு

அருண் விஜய்யின் வரவிருக்கும் படவரிசையில் பார்டர் திரைப்படம் முன்னிலை வகிக்கிறது. அறிவழகன் இயக்கியுள்ள இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

வெற்றி படங்கள்

வெற்றி படங்கள்

பார்டர் பட இயக்குனரான அறிவழகன் ஏற்கனவே ஈரம், வல்லினம், ஆறாது சினம் & குற்றம் 23 ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தான் ஏவிஎம் தயாரிக்கும் Tamil Stalkers எனும் வெப் சீரியஸையும் இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னரே வெளியானது.

நான்கு மொழிகள்

நான்கு மொழிகள்

திரைப்படத் திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு தயாராகவுள்ள இந்த Tamil Stalkers வெப் சீரியஸில் நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப் சீரியஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X