சுடுகாட்டில் சாப்பிட்ட அருண் விஜய் படக்குழுவினர்... நடிகர் காளி வெங்கட்டின் நகைச்சுவையான அனுபவம்

சென்னை: அருண் விஜய் நடித்திருக்கும் சினம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இதில் அவருடன் பணியாற்றிய நபர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நடித்துள்ள காளி வெங்கட் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார்.

ஜி.என்.ஆர்.குமரவேலன்

ஜி.என்.ஆர்.குமரவேலன்

கல்யாணராமன், மீண்டும் கோகிலா, மகராசன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஜி.என்.ரங்கராஜன் அவர்களின் மகன்தான் ஜி.என்.ஆர்.குமரவேலன். நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன்பிறகு ஹரிதாஸ் படம் மூலம் பிரபலமானார். கடைசியாக நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து வாகா படத்தை இயக்கினார். தற்சமயம் சினம் படத்தை இயக்கியிருக்கிறார்.

அருண் விஜய் தயாரிப்பு

அருண் விஜய் தயாரிப்பு

2022-ஆம் ஆண்டில் ஓ மை டாக், யானை ஆகிய இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸும் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளது. இப்போது சினம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் குற்றம் 23 மற்றும் தமிழ் ராக்கர்ஸ் ப்ராஜெக்ட்டுகளில் அவரை இயக்கியிருக்கும் அறிவழகன் இயக்கத்தில் உருவான பார்டர் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் சினம் திரைப்படத்தின் கதையை கேட்டதும் தானே அதனை தயாரித்துள்ளார். குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

லாக் டவுன் கடன்

லாக் டவுன் கடன்

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் காளி வெங்கட். கடந்த இரண்டு ஆண்டுகள் லாக்டவுன் இருந்தபோது பல கமிட்மெண்ட்டுகளால் பணம் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் வெளியில் கடன் வாங்க ஆரம்பித்ததாகவும் ஒரு கட்டத்தில் கடன் கொடுப்பவருக்கே காசு இல்லாத நிலைமை ஏற்பட்டதாகவும் கடன் அதிகரித்த நிலையில் அப்போதுதான் ஒரு நாள் காலை சினம் படத்திற்காக தனக்கு நடிகர் விஜயகுமார் முன்பணம் போட்டதாகவும் அந்த முன் பணத்தை வைத்தே தன்னுடைய மொத்த கடனையும் அடைத்து மீதமான பணத்தை சேமித்து வைத்துக் கொண்டதாகவும் காளி வெங்கட் நன்றி தெரிவித்துள்ளார்.

சுடுகாட்டுக்கு வந்துட்டு போங்க

சுடுகாட்டுக்கு வந்துட்டு போங்க

மற்ற துறையில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என்று தெரியவில்லை. ஆனால் சினிமாக்காரர்களுக்கு சுடுகாட்டில் படப்பிடிப்பு நடந்த போது அங்கேயே அமர்ந்து உண்ணக்கூடிய வாய்ப்பு அமையும். சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்ததால் அங்குள்ளவர்கள் தனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும் ஷூட்டிங்கின்போது தன்னிடம் வந்து அண்ணே சூட்டிங் எப்ப முடியும் என்று அவர்கள் கேட்க ஏனென்று நான் கேட்க வெளியில மூணு பீசு எரிவதற்காக வெயிட்டிங்ல இருக்கு என்று நகைச்சுவையாக கூறினார்களாம். அது மட்டுமின்றி சூட்டிங் முடிந்து கிளம்பும் வேளையில், அண்ணே நேரம் கிடைச்சா சுடுகாட்டுக்கு வந்துட்டு போங்க என்று தன்னை அழைத்ததாக நகைச்சுவையாக கூறியுள்ளார். உண்மையாகவே அதன்பின்னர் ஒருநாள் அந்த சுடுகாட்டிற்கு சென்று அவர்களை பார்த்ததாகவும் அவர்கள் அழைத்ததின் பேரில் அவர்கள் வீட்டிற்குச் சென்று உணவு சாப்பிட்டதாகவும் காளி வெங்கட் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X