தோல்வி உன்னை உனக்கே அறிமுகம் செய்யும்.. அருண்விஜயின் புது தத்துவம்

சென்னை : அருண் விஜய் கழுகை கையில் பிடித்து கொண்டு இருப்பது போல , ஒரு புகைப்படத்தை பதிவேற்றி வாழ்கை பற்றிய கவிதை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

அருண்விஜய் தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான இடங்களில் நடந்து வந்தது. அதனையடுத்து படக்குழு தற்போது சென்னை திரும்பி இருக்கிறது .

 Arun vijay New Philosophy post

அருண் விஜய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்து வருகிறார் .இந்த படத்தில் விஜய் ஆண்டனி ,அக்ஷ்ரா ஹாசன் ,பிரகாஷ்ராஜ்,நாஸர் ,தலைவாசல் விஜய் , தயாரிப்பாளர் ஜெ.சதீஷ் குமார் மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். அக்னி சிறகுகள் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

தற்போது அருண் விஜய் இந்த படத்தின் போது ரஷ்யாவில் எடுக்க பட்ட ஒரு புகைப்படத்தை பதிவேற்றி வாழ்கை பற்றிய கவிதை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் கையில் கழுகை பிடித்து கொண்டு இருக்கிறார் அருண்விஜய் ,அந்த புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு வெற்றி என்பது உலகிற்கு உன்னை அறிமுகம் செய்வது ,தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது என்று மிக ஆழமான கருத்து நிறைந்த கவிதையை கூறியிருக்கிறார் .

அர்த்தம் மற்றும் கருத்து மிகுந்த கவிதையை அருண்விஜய் கூறுவதற்கு அவர் வாழ்க்கை பயணம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் .ஏனெனில் அருண்விஜய் சினிமாவில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தவர் படங்கள் இன்றி பல வருடங்கள் தவித்து இருக்கிறார் .பல தோல்விகளை தாண்டி வந்திருக்கிறார் .அதன் பின் அவரது முயர்ச்சியும் உழைப்பும் மிக பெரிய அங்கீகாரத்தை அவருக்கு கொடுத்து இருக்கிறது .இந்த கவிதைக்கு முழு காரணம் அவர் கடந்து வந்த பாதையாகவும் அவரின் அனுபவமாகவும் கூட இருக்கலாம

தற்போது அருண் விஜய் அக்னி சிறகுகள் படத்திற்கு பிறகு ,கார்த்திக் நரேனின் மாஃபியா படத்தில் நடித்து இருக்கிறார் .அடுத்தாக பாக்ஸர் ,சினம் மற்றும் குற்றம் 23 எடுத்து வெற்றி பெற்ற அறிவழகனுடன் ஒரு படத்தில் இணைகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X