விக்டரைப் போல ரஞ்சித் கதாபாத்திரமும் பெயர் சொல்லும்.. அருண் விஜய் ஓபன் டாக்!

சென்னை : தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் என பலராலும் புகழப்பட்டு வரும் நடிகர் அருண் விஜய் தமிழ் திரைப்படத்துறையையும் தாண்டி இப்பொழுது தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோ, வில்லன் என எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் அடித்து தூள் கிளப்பும் அருண் விஜய் தடம், குற்றம் 23, மாபியா என தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இப்போது நடித்துவரும் அக்னி சிறகுகள் திரைப்படத்தில் தான் நடித்து வரும் கதாபாத்திரம் என்னை அறிந்தால் விக்டர் கதாபாத்திரம் போல பேசப்படும் என கூறியிருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் அருண் விஜய் சமீபகாலமாக தனது மிரட்டலான நடிப்பின் மூலம் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார்.

கடின உழைப்பின் மூலம்

கடின உழைப்பின் மூலம்

தொடர் தோல்விகளையும் சுமாரான வெற்றிகளையும் மட்டுமே கண்டுவந்த அருண் விஜய் தனது கடின உழைப்பின் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெயர் செல்லக் கூடிய சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பட்டையை கிளப்பி

பட்டையை கிளப்பி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தின் அஜித்துக்கு எதிரியாக ஆக்ரோஷமான வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படத்தில் வரும் விக்டர் கதாபாத்திரம் பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

நம்பிக்கைக்குரிய நாயகனாக

நம்பிக்கைக்குரிய நாயகனாக

அருண் விஜய் நடித்த கதாபாத்திரங்களில் விக்டர் கதாபாத்திரம் தனிச் சிறப்பை பெற்றிருக்கும் நிலையில், அதை தொடர்ந்து இவர் நடித்த தடம், குற்றம் 23, செக்க சிவந்த வானம், சாஹோ என அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நாயகனாக இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாக்சர்

பாக்சர்

மாஃபியா சாப்டர் 1க்கு பிறகு அக்னி சிறகுகள், சினம், பாக்சர் என வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்து வரும் அருண் விஜய் இப்பொழுது நடித்து வரும் அக்னி சிறகுகள் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி கூறியிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

மீண்டும் கொண்டாட வைக்கும்

மீண்டும் கொண்டாட வைக்கும்

செம ஸ்டைலிஷாக சீறிப்பாயும் சிங்கம்போல பாய்ந்து வரும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அக்னி சிறகுகள் திரைப்படத்தில் நடித்திருக்கும் ரஞ்சித் கதாபாத்திரம் நிச்சயமாக என்னை அறிந்தால் விக்டர் கதாபாத்திரத்திற்கு இணையாக இருக்கும். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது மீண்டும் விக்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பது போல உற்சாகமாக உணர்ந்தேன், ரஞ்சித் கதாபாத்திரம் கட்டாயமாக உங்களை மீண்டும் கொண்டாட வைக்கும் என அருண் விஜய் கூறியிருக்கும் இந்த பதிவை பார்த்த பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X