அஜித்துடன் மோத வாரிசு நடிகரை களமிறக்கும் இயக்குநர்?.. கோலிவுட்டில் பரபரக்கும் தகவல்

சென்னை: ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல வாரிசு நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். வங்கி மக்களிடம் ஆடும் தகிடுதத்தங்களை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது. படமானது ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

லைகாவுடன் கைகோர்த்த அஜித்குமார்

லைகாவுடன் கைகோர்த்த அஜித்குமார்

துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அஜித்தின் 62ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும்; அனிருத் இசையமைப்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் மிகச்சிறந்த கதையை கொடுத்துவிடுவாரா என்ற கேள்வியையும் அவ்வப்போது கேட்டுவந்தனர்.

விக்னேஷ் சிவனுக்கு வந்த பஞ்சயாத்து

விக்னேஷ் சிவனுக்கு வந்த பஞ்சயாத்து

சூழல் இப்படி இருக்க விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதையும் அஜித்துக்கும், லைகா தரப்பினருக்கும் பிடிக்காமல் போக படத்திலிருந்து நீக்கப்பட்டார் விக்னேஷ் சிவன். இதனையடுத்து நயன்தாரா நேரடியாக லைகாவிடம் பேசியதாகவும் அதற்கும் லைகா தரப்பு ஒத்துவரவில்லை எனவும் கூறப்பட்டது. எனவே ஏகே 62 படத்தின் அடுத்த இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்தது.

ஏகே 62 இயக்குநர் மகிழ் திருமேனி

ஏகே 62 இயக்குநர் மகிழ் திருமேனி

விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதை அடுத்து அஜித்தின் 62ஆவது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. தொடர்ந்து மகிழ் திருமேனி, வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன், ஏ.ஆர். முருகதாஸ் என பல பெயர்கள் அடிபட்டன. ஆனால் இந்த ரேஸில் மகிழ் திருமேனி வென்றுவிட்டார். மகிழ் சொன்ன கதை அஜித்துக்கும், லைகாவுக்கும் பிடித்துப்போக ஏகே 62 இயக்குநராக அவரையே லாக் செய்துவிட்டார்கள். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏகே 62 வில்லன் வாரிசு நடிகரா?

ஏகே 62 வில்லன் வாரிசு நடிகரா?

இந்நிலையில் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விஜயகுமாரின் மகனும், பிரபல நடிகருமான அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் விஜய் ஏற்கனவே அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த விக்டர் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. மேலும், அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடையற தாக்க, தடம் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் என்னை அறிந்தால் கூட்டணி?

மீண்டும் என்னை அறிந்தால் கூட்டணி?

மகிழ் திருமேனி கௌதம் வாசுதேவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஆவார். எனவே இந்தப் படத்தில் அருண் விஜய் நடிக்கும்பட்சத்தில் என்னை அறிந்தால் போல் படம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் அஜித் ரசிகர்கள். அதுமட்டுமின்றி அருண் விஜய்யுடன் மகிழ் திருமேனிக்கு நல்ல நட்பு இருப்பதால் பெரும்பாலும் இந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X