அருண் விஜய்க்கு இம்புட்டு அழகா.. தேவதை போல பொண்ணா.. வாயை பிளக்கும் ரசிகர்கள்!

By Staff

சென்னை: நடிகர் அருண் விஜய் தனது அழகு மகளின் படத்தை டிவீட்டரில் போட்டுள்ளார். அந்தக் குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டுள்ளது.

Recommended Video

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!

முன்னணி நடிகர் அருண்விஜய், நடிகர் விஜய குமாரின் ஒரே மகனாவார் என்பது எல்லோரும் அறிந்தது. அருண் விஜய் முதல் முறையாக 1995ம் ஆண்டு முறை மாப்பிள்ளை படத்தில் பதினெட்டு வயது பையனாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்திருந்தாலும் பாண்டவர் பூமியில் நடித்து அனைவரது வீடுகளிலும் செல்லப்பிள்ளையாக மாறினார்.

தற்போது முன்னணி கதாநாயகராக மாஸ் காட்டி வருகிறார். என்னை அறிந்தால் படத்திற்கு சிறந்த வில்லனுக்கு ஆன விருது கிடைத்தது. இந்த படத்திற்கு 6 மணி நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணியிருக்கிறார்.

கெட்டப் நாயகன்

கெட்டப் நாயகன்

அவர் படத்திற்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தயார் என்று ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கெட்டப் என்று இளைய தலைமுறையை வசியம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய உடம்பு பின்னர் அவருடைய டாட்டூ எல்லாமே ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது . நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தாலும் அவருடைய நடிப்பு வில்லத்தனம் வெறித்தனமாக இருந்தது. அருண் விஜய் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார்.

ஸ்டைல் படங்கள்

ஸ்டைல் படங்கள்

எப்போதும் தன்னுடைய நியூ ஸ்டைல் புகைப்படங்களையும் அடுத்த படத்திற்கான புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். இவ்வளவு நாளா நமக்கு தெரியாமல் போனது என்று புலம்பித் தள்ளுகிறார்கள். ஆமாங்க 42 வயதான அருண் விஜய் 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு ஆணும் பெண்ணும் உள்ளது. பையன் பேரு அர்ணவ் விஜய், மகள் பேரு பூர்வி.

தேவதை மகள்

தேவதை மகள்

ஆனால் அருண் விஜய் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய மகனுடைய புகைப்படங்களை மட்டுமே பதிவேற்றியுள்ளார். தன்னுடைய மகளை வெளியே தெரியாமல் பொத்தி பொத்தி வைத்திருந்தார். தற்போது தன்னுடைய மகளின் பிறந்த நாளை கொண்டாடிய அவர் அந்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பதிவு கொஞ்ச நேரத்தில் பிச்சிக்கிட்டு போயிருக்கு.

வைரலாகி விட்டது

வைரலாகி விட்டது

ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணானும் ஆச்சரியப்பட்டு இருக்காங்க. நிறைய பேர் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி அந்த பொண்ணை ஆசீர்வாதம் பண்ணி இருக்காங்க... எவ்வளவுதான் பெரிய ஆளாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளிடம் ஒரு தந்தை குழந்தையாகவே மாறிட்டாங்க. தன் பொண்ணோட பிறந்தநாள் தானும் ஒரு குழந்தை போல மாறி அந்த தேவதையை கொஞ்சி, அனைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அப்பாவான அருண் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X