அருண் விஜய்யின் ரெட்ட தல ரிலீஸ் தேதி சொல்லியாச்சு.. வருடக் கடைசியில் செம கொண்டாட்டம் போங்க!

சென்னை: நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் ரெட்ட தல. இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் படக்குழு தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். கிராமத்துக் கதையில் தொடங்கி அனைத்து கதாபாத்திரங்களுக்கும் மிகவும் அட்டகாசமாக பொருந்தக் கூடியவர். ஆக்‌ஷன் படங்கள் என்றாலே இறங்கி ஒரு கை பார்த்துவிடுவார் அருண் விஜய். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு பலமான வில்லனாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்று ஆனந்தக் கண்ணீர் வடித்தவர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இட்லி கடை. தனுஷ் இயக்கத்தில் வெளியான இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதற்கு முன்னர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருந்தார்.

Arun Vijay Retta Thala Movie Release On December 18 With Pradeep Ranganathan Lik
Photo Credit:

அருண் விஜய்: வணங்கான் படம் இவரது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். காரணம் அந்த படத்தில் அருண் விஜய் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்ததாக பலரும் பாராட்டினர். இப்படி இருக்கும்போது, அருண் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ரெட்ட தல. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரிலீஸ் தேதி: ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரண்டு கெட்டப்களில் நடித்துள்ளார். மேலும் சிதி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் டீசர் ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் படத்தை வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

Arun Vijay Retta Thala Movie Release On December 18 With Pradeep Ranganathan Lik
Photo Credit:

பிரதீப் ரங்கநாதன்: டிசம்பர் 18ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்தால் எப்படியும் குறைந்த பட்சம் மூன்று வாரங்கள் தியேட்டரில் படம் ஓட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஜனவரி 9ஆம் தேதி தான் விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸ் ஆவதால், டிசம்பர் கடைசி வாரத்தில் படங்களை ரிலீஸ் செய்ய பெரிதாக யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி இருக்கும்போது, ரெட்ட தல படம் மூன்று வாரங்கள் திரையரங்கில் ஓடுவதற்கு சரியான வாய்ப்பாகவும் உள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ. கே படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X