Retta Thala Public Review: அருண் விஜயின் ரெட்ட தல எப்படி இருக்கு? பப்ளிக் விமர்சனம்

சென்னை: இயக்குநர் கிரிஷ் தமிழ்குமரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ரெட்ட தல. இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டின் பொங்கலில் இவரது நடிப்பில் வணங்கான் படம் வெளியானது. அதேபோல் கிறிஸ்துமஸில் அவரது நடிப்பில் ரெட்ட தல படம் வெளியாகி உள்ளது. ரெட்ட தல படத்தின் டிரைலர் வெளியாகி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் இன்று வெளியாகியுள்ளதால், படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

ரசிகர் ஒருவர் கூறும்போது, " படத்தின் திரைக்கதை தான் மேட்டரே. படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும், இரண்டாம்பாதி திரைக்கதை விறுவிறுப்பாக வைத்து ரசிகர்களை திருப்திகரமாக வெளியே அனுப்பி உள்ளார்கள். படம் கட்டாயம் அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். படம் பெரிய வெற்றியை எட்டும் என நம்பலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Retta Thala Public Review Fans Appreciates Screenplay and Music Works Well

அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, படத்தில் நான் எதிர்பார்த்து வந்ததே சண்டைக் காட்சிகளும் பின்னணி இசையும் தான். அந்த இரண்டுமே படத்தில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகி உள்ளது. திரைக்கதையில் ரசிகர்களை திருப்தியடையச் செய்துள்ளனர். மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

திரைக்கதை: " விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்றுதானே இப்போது எல்லாம் கேட்கிறார்கள். படம் ஆரம்பித்தது முதல் கிளைமாக்ஸ் வரை படம் நன்றாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், படத்தை ரசிகர்களுக்கு போர் அடிக்க கூடாது என்று அவர்கள் அமைத்திருந்த திரைக்கதை சூப்பர். பாடலை வைத்து டைமை கடத்த வேண்டும் என்று இல்லாமல், தேவையான இடத்தில் பாடலை வைத்துள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Retta Thala Public Review Fans Appreciates Screenplay and Music Works Well

அருண் விஜய் படம்: அருண் விஜய் நன்றாக நடித்துள்ளார். கதாநாயகியும் நன்றாக நடித்துள்ளார். ஆனால் படத்தின் கதை ஆஹா ஓஹோ கதை எல்லாம் இல்லை. ஒரு முறை பார்க்கலாம். பின்னணி இசைதான் படத்தை எலிவேட் செய்யும் ஒன்றாக உள்ளது. எனக்கு இந்த படம் பிடித்துள்ளது. அருண் விஜய்க்காக தான் படம் பார்க்க வந்தேன். கருத்து சொல்லும் படம் எல்லாம் இல்லை. இது ஒரு கமர்ஷியல் படம். ரசிகர்கள் ஒரு படம் பார்க்கலாம் என்ற மனநிலையில் வந்தால் படம் பிடிக்கும். கருத்து வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று வந்தால் படம் அவர்களுக்கு ஒர்க் அவுட் ஆகாது. படத்தில் கலட் காம்பினேஷன், எடிட்டிங் எல்லாம் நன்றாக உள்ளது. சில படங்களில் கலர் மிக்ஸிங்கில் சொதப்பி விட்டுவிடுவார்கள். அதனால் கண் வலி எல்லாம் வந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் அது போல எல்லாம் இல்லாமல் படத்தை இயக்குநர் நன்றாக எடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X