அருண் விஐய்யின் 33வது திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு .. பழனியில் தொடங்கியது!
சென்னை : அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் தனது 33வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் தொடங்கியிருக்கும் நிலையில் அங்கு இருக்கும் ஜிம்மில் எடுத்துக்கொண்ட மாஸான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருண்விஜய் பதிவிட்டு உள்ளார்.

தோல்விப் படமாக
இயக்குனர் ஹரி கடைசியாக இயக்கிய சாமி 2 தோல்விப் படமாக அமைய அடுத்து அருண் விஜய்யின் 33வது படத்தை இயக்கி வருகிறார். இவரின் படத்தில் வழக்கமாக இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த திரைப்படத்திலும் இருக்க இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் ஏற்கனவே மாஃபியா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

ஜிம்மில் உடற்பயிற்சி
இந்த நிலையில் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக தற்போது பழனியில் தொடங்கியுள்ளது. எப்பொழுதும் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் சூட்டிங் சென்ற இடத்திலும் அதே போல தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அருகிலுள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

முதல் முறையாக இணைந்து
அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய திரைப்படம் என அருண்விஜய் நடித்து வந்த அனைத்து படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் இப்பொழுது ஹரி உடன் இணைந்து முதல் முறையாக தனது 33-வது படத்தில் பணியாற்றி வருகிறார்.

ஜிம் இளைஞர்களுடன்
சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அருண் விஜய் தற்பொழுது பழனியில் முழுவீச்சில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வர ஒவ்வொரு நாளும் சூட்டிங் முடிந்த பிறகும் அருகில் உள்ள ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்தார். மேலும் தன்னுடன் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தன்னுடைய 33வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பழனியில் தொடங்கியுள்ளது எனவும் ஷூட்டிங் முடிந்தபிறகு இந்த பசங்க கூட ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது மேலும் மோட்டிவேஷனாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











