ஹரி இயக்கத்தில் அருண் விஜய் … அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை: அருண் விஜயின் 33வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.

நடிகை பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக சில தகவல்கள் வந்துள்ளன.

சூர்யாவின் அருவா

சூர்யாவின் அருவா

இயக்குனர் ஹரி, நடிகர் சூரியாவின் அருவா படத்தை இயக்க உள்ளதாக முன்னர் தகவல்கள் வந்தன. இதற்கிடையில் சூர்யா நவரசா வெப் தொடர், இயக்குனர் பாண்டிராஜின் படம் என தொடர்ந்து கமிட்டாக அருவா படத்தின் நிலைமை கேள்விக்குறியானது.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் என அருண் விஜயின் படங்கள் வரிசையாக வெளிவரவுள்ளன. இதைத்தொடர்ந்து தனது 33வது படத்தில் இயக்குனர் ஹரியுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றவுள்ளார் அருண்விஜய்.

பலமான கூட்டணி

பலமான கூட்டணி

Drumsticks Productions தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி என #AV33 பலமான கூட்டணியாக அமைந்துள்ளது.

பழனியில் தொடக்கம்

பழனியில் தொடக்கம்

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 3ம் தேதி பழனியில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை, கூடிய விரைவில் படக்குழு இதனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X