அருண் விஜய்யின் அடுத்த மிஷனில் இணைந்த புதுமுக நடிகை.. அது என்ன மிஷன் தெரியுமா?
சென்னை: நடிகர் அருண் விஜய்க்கு அடுத்த ஆண்டு மிகப்பெரிய ஆண்டாக அமையவுள்ளது.
அருண் விஜய்யின் 30வது படமான சினம் படத்தை தொடர்ந்து, அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்யின் 31வது படமும் உருவாகி வருகிறது.
ஏவி 31 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் ஒரு மிஷனாக உருவகப்படுத்தப்பட்டு வருகிறது.
குற்றம் 23 படத்தை இயக்கிய இயக்குநர் அறிவழகனின் அடுத்த மிஷனாக அருண்விஜய்யின் 31வது படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக புதுமுக நடிகை ஸ்டெஃபி பாட்டேல் அறிமுகமாகவுள்ளார்.

மாஃபியா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா படம் விரைவில் திரைக்கு வருகிறது. லைகா நிறுவனம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், மாஃபியா டிரைலர் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
ரொம்ப பிஸி
மாஃபியா படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்து வரும் 30வது படத்திற்கு சினம் என அண்மையில் டைட்டில் வைக்கப்பட்டது. மேலும், நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னிச் சிறகுகள் படத்தில், விஜய் ஆண்டனியுடன் முதன் முறையாக அருண் விஜய் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள 31வது படம் குறித்த அப்டேட்டுகள் கோலிவுட்டை கலக்கி வருகிறது.
ஸ்டெஃபி பாட்டேல்
ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏவி 31 படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ளார். மேலும், இரண்டாவது ஹீரோயினாக புதுமுக நடிகை ஸ்டெஃபி பாட்டேல் இணைந்துள்ளார்.

என்ன மிஷன்
மருத்துவ முறைகேடுகளை மையமாக வைத்து குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன், தற்போது மீண்டும் அருண் விஜய்யை வைத்து ஸ்பை த்ரில்லர் படத்தை பிரம்மாண்டமாக இயக்கவுள்ளார். சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி பகுதிகளில் இந்த மிஷன் படமாக்கப்படவுள்ளதாம்.
இவர் தான் மியூசிக்
விக்ரம் வேதா, கைதி என பல தரமான சம்பவங்களை செய்து வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தான் இந்த மிஷனிலும் இணைந்துள்ளார். மேலும், இந்த ஏவி 31ல் இணையவுள்ள பிரபலங்கள் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் விருந்தாக வெளிவரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











