முடிந்தது ஷூட்டிங்.. டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் விஜய் படத்தின் பிரமாண்ட கிளைமாக்ஸ் காட்சி!

By

சென்னை: அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

இதை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார். இதில், சப் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார்.

எமோஷனல் கேரக்டர்

எமோஷனல் கேரக்டர்

இதன் போஸ்டரில் மீசை இல்லாத அருண் விஜய்யின் தோற்றம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. 'அவரது கேரக்டர் எமோஷனலானது. அதே நேரத்தில் கோபமான கேரக்டர். அவரது கோபத்தைச் சூழ்நிலைகள் தீர்மானிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று இயக்குனர் கூறியிருந்தார்.

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள்

இந்தப் படத்தை அடுத்து அறிவழகன் இயக்கும் படம், அக்னிச் சிறகுகள் படங்களில் நடித்து வந்தார். அக்னிச் சிறகுகள் படத்தை மூடர் கூடம் நவீன் இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார்.

ஷூட்டிங் நிறைவு

ஷூட்டிங் நிறைவு

இதன் கடைசிக் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் அறிவழகன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'குற்றம் 23' படத்திற்கு பிறகு அருண் விஜய் - அறிவழகன் இணைந்திருக்கும் படம் இது.

கிரிக்கெட் மைதானம்

கிரிக்கெட் மைதானம்

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் அருண் விஜய்யுடன் ரெஜினா, புதுமுகம் ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் பகவதி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் பிரமாண்டமாக நடந்தது. கிரிக்கெட் மைதானத்தில் இதன் க்ளைமாக்ஸ் காட்சி படமாகியுள்ளது.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

அருண் விஜய் கூறும்போது, எப்போதுமே சினிமா கூட்டு முயற்சிதான். இந்த இக்கட்டான சூழலில் இந்தப் படத்தை முடிப்பதில் எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குநர், நாயகி ரெஜினா மற்ற படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. அறிவழகனின் படங்களில் அடுத்தக்கட்ட படமாக இது இருக்கும்" என்றார்.

இக்கட்டானச் சூழல்

இக்கட்டானச் சூழல்

இயக்குனர் அறிவழகன், படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, இந்த இக்கட்டானச் சூழலிலும், கடந்த 25 நாட்களாக நடந்து வந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. படத்தின் ஹீரோ அருண் விஜய், உதவி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X