கொரோனாவில் இருந்து மீண்டார் ஹரி..அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்குகிறது அருண் விஜய்யின் ஏவி33!
சென்னை: இயக்குநர் ஹரி கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் அருண் விஜய்யின் ஏவி 33 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் ஏவி 33 என குறிப்பிடப்படுகிறது.
இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வந்தது.

ஹரிக்கு உடல்நலக்குறைவு
இந்நிலையில் கடந்த மாதம் பழனியில் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த இயக்குநர் ஹரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மீண்டும் படப்பிடிப்பு
இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு முடிவு
இயக்குநர் ஹரி கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், காரைக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை
இந்தப் படத்தை ட்ரம்ஸ்டிக் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











