ஹரி படத்துக்கு பூஜை போட்டாச்சு.. அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தொடங்கியது ஏவி33!
சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் ஏவி 33 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் லீடு ரோலில் நடிக்கின்றனர்.
மாஃபியா படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

அடங்கிப்போன அருவா
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு அருவா ரிலீசாகிறது என பரபரப்பு அறிவிப்பு வந்த வேகத்திலேயே காணாமல் போனது. ஆறு, வேல், சிங்கம் 1, 2 மற்றும் 3 பாகங்கள் என தொடர்ந்து வெற்றிக் கூட்டணி திடீரென சில காரணங்களுக்காக அப்படியே டிராப் ஆனது.

அருண் விஜய்யின் 33வது படம்
என்னை அறிந்தால் படத்தில் வில்லன் விக்டராக மிரட்டிய பின்னர், கோலிவுட்டில் தனது செகண்ட் இன்னிங்ஸை பலமாக தொடங்கி உள்ளார் நடிகர் அருண் விஜய். ஹரி - சூர்யா படம் டிராப் ஆன நிலையில், ஹரி இயக்கத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமானார்.

ஹீரோயின் மாற்றம்
சூர்யாவுக்கு ஜோடியாக அருவா படத்தில் ராஷி கன்னா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆன நிலையில், ஹீரோயினையும் படக்குழு மாற்றி உள்ளது. ஏற்கனவே மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

அதே கதையா
சூர்யாவுக்காக இயக்குநர் ஹரி உருவாக்கி வைத்திருந்த அருவா படத்தின் கதை தானா? இல்லை அருண் விஜய்க்கு என புதிதாக ஒரு கதையை படமாக்குகிறாரா ஹரி என்பது தெரியவில்லை. நிச்சயம் ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் என்டர்டெயினராக இந்த படம் உருவாகும் என்பது மட்டும் தெரிகிறது.

பூஜை போட்டாச்சு
சாமி 2 படத்தின் தோல்விக்கு பிறகு கம்பேக் கொடுக்க நினைத்த ஹரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருந்தார். கொரோனா பரவல் காரணமாக எல்லாமே மாறிய நிலையில், தற்போது மார்ச் 3ம் தேதியான இன்று ஏவி 33 படத்திற்கு பூஜை போட்டுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அப்பா விஜயகுமார்
மகன் அருண் விஜய் மற்றும் மருமகன் ஹரி இணைந்து உருவாக்கவுள்ள இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என நடிகர் விஜயகுமார் பட பூஜையில் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினார். சாமி, சிங்கம், தாமிரபரணி என இயக்குநர் ஹரியின் பல படங்களில் நடித்துள்ள விஜயகுமார் இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











