அஜித் படத்தில் வில்லனாக அருண் விஜய்

By Mayura Akilan

அஜீத் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் தற்போது கௌதம்மேனன் இயக்கத்தில் தன்னுடைய 55 வது படத்தில் நடித்து வருகிறார் என்று அனைவருக்கும் தெரியும்.

இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

அருண்விஜய்

அருண்விஜய்

இந்நிலையில் இந்தப் படத்தில் அருண் விஜய் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து தற்போது செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

வில்லனாக மாறிய அருண் விஜய்

வில்லனாக மாறிய அருண் விஜய்

அஜித் அண்ணன்-தம்பி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். வாலி, வரலாறு, வில்லன், அட்டாகாசம் படங்களுக்குப் பின்னர் அஜித் மீண்டும் அண்ணன், தம்பியாக நடிக்கும் படம் இது. இந்நிலையில் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார்

ஹீரோ டூ வில்லன்

ஹீரோ டூ வில்லன்

90 களில் ஹீரோவாக அறிமுகமான அருண்விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும் சில படங்கள் மட்டுமே பெயர் சொல்லும் படியாக அமைந்துள்ளன. எனவே ஹீரோயிசம் செய்வதை விட்டு வில்லனாக மாறிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்.

அப்பா வழியில்

அப்பா வழியில்

அப்பா விஜயகுமார் வழியில் ஹீரோவாக இருந்து வில்லான மாறியுள்ளார் அருண் விஜய்.

லீக் செய்த ஏ.எம்.ரத்னம்

லீக் செய்த ஏ.எம்.ரத்னம்

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் ரத்னமே இதனை தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே ஒருமுறை கௌதம் மேனனுடன் நான் படம் செய்வதாக இருந்தது. ஆனால், அது இப்போதுதான் கைகூடியிருக்கிறது. அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என ஏ.எம் ரத்னம் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X