அருண் விஜயின் 31வது படம் #TheatricalRights அப்டேட் .. இன்னும் வெளிவராத தலைப்பு

சென்னை: அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் தயாராகியுள்ள பெயரிடப்படாத படம் #AV31.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார், சாம் c.s. இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் Theatrical Rights குறித்த அப்டேட்டை படக்குழு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்று காரணமாக நின்று போன இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று முடிந்தது. உடனே டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு தாமதிக்காமல் சில நாட்களிலேயே வேலையை முழுவதுமாக முடித்தது.

நம்பிக்கை அளிக்கிறார்

நம்பிக்கை அளிக்கிறார்

அருண் விஜய் - அறிவழகன் கூட்டணியில் இதற்குமுன் வெளிவந்த படம் குற்றம் 23. மெடிக்கல் த்ரில்லரான குற்றம் 23 திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் என்பதால் இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்த படம் மட்டுமன்றி அருண் விஜய்க்கு நிறைய படங்கள் வரிசையில் வெளிவர காத்துள்ளது. சினம், அக்னி சிறகுகள், சூர்யா தயாரிக்கும் படம், பாக்ஸர், ஹரி இயக்கும் படம் என படங்கள் வரிசையில் உள்ள நிலையில் அருண் விஜயின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சம்மர் ரிலிஸ்

சம்மர் ரிலிஸ்

இந்த படத்தின் #TheatricalRights உரிமையை 11:11 ப்ரோடுக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. உளவு சம்பந்தமான த்ரில்லர் படமாக தயராகியுள்ள இந்தப் படத்துக்கு 'ஜிந்தாபாத்', 'பார்டர்' உள்ளிட்ட பெயர்கள் சொல்லப்பட்டாலும் இன்னும் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சம்மரில் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X