Retta Thala Blue Sattai Review - அருண் விஜய்யின் ரெட்ட தல.. ரெட்ட தல வலி.. ப்ளூ சட்டை மாறன் சிதைச்சிட்டாரு

சென்னை: விஜயகுமாரின் மகனான அருண் விஜய் இப்போது க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து மான் கராத்தே படத்தை இயக்கியவர். ரெட்ட தல படத்தில் அருண் விஜய்யுடன் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று வெளியான இப்படத்துக்கு பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமாருக்கு பிறந்தவர் அருண் விஜய். தந்தை மாதிரியே நடிகராக இருக்கிறார். 90களிலேயே அவர் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டாலும் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இத்தனைக்கு பாண்டவர் பூமி உள்ளிட்ட க்ளாஸிக் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார். ஆனாலும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பிரேக் கிடைக்காமல் திணறி; சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியும் இருந்தார்.

வணங்கானும் அடி: பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த அவர்; தனது இரண்டாவது இன்னிங்ஸில் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்தார். மாற்று திறனாளியாக நடித்து தன்னுடைய திறமையை அப்படத்தில் அவர் நிரூபித்திருந்தாலும் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததால்; அவருடைய உழைப்புக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் போனது. சமீபத்தில் கொடுத்த பேட்டியில்கூட வணங்கான் வணிக ரீதியாக வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்பட்டிருந்தார் அருண்.

Arun Vijay s Retta thala Receives Mixed Reviews Blue Sattai Maran Criticises Character Design
Photo Credit:

ரெட்ட தல: அப்படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்த அவர்; இப்போது க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்திருக்கிறார். திருக்குமரன் ஏற்கனவே மான் கராத்தே படத்தை இயக்கியவர். இதில் அருண் விஜய்யுடன் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனத்தையே ரசிகர்கள் கொடுத்தார்கள்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில், "இந்தப் படம் ஆரம்பித்து 20 நிமிடங்களிலேயே; திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படத்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. படத்தில் எல்லோருமே கெட்டவர்கள். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். எந்த கேரக்டர் பக்கமும் நியாயமே கிடையாது. யாராவது ஒரு ஆள் நியாயமாக இருந்தால்தான்; அவர் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் படம் பார்க்கும்போது நமக்கு வரும். ஆனால் இதில் எந்த கேரக்டரையும் ஒழுங்காக டிசைன் செய்யவில்லை.

ரெட்ட தல வலி: அதேபோல் ஒவ்வொரு கேரக்டரையும் இவர் பெரிய ஆளு என்று பயங்கரமாக பில்ட் அப் கொடுக்கிறார்கள். அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்று பார்த்தால் அதற்கும் சீன் இல்லை. இதே மாதிரிதான் வில்லனுக்கும் சொல்கிறார்கள். விஷுவலாக எதையும் காட்டவில்லை. ஹீரோயின் கேரக்டரை ரொம்ப வொர்ஸ்ட்டாக டிசைன் செய்திருக்கிறார்கள். இது உண்மையில் நல்ல கதை. இதற்கு ஏற்றபடி திரைக்கதையே செய்யாமல் இஷ்டத்துக்கு செய்து வைத்திருக்கிறார்கள். அதேசமயம் ஒரு முறையான சினிமாவுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்திருக்கிறார்கள். ஆகமொத்தம் ரெட்ட தல ரெட்ட தல வலி" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X