அழகான புகைப்படத்தை பகிர்ந்து.. அருண்விஜய்க்கு திருமணநாள் வாழ்த்து சொன்ன அக்கா பொண்ணு!
சென்னை : நடிகர் அருண் விஜயின் அக்கா மகள் தியா, திருமணநாள் வாழ்த்துக்கள் கூறி அழகான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
லண்டனில் படித்து வரும் தியாவின் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் விரைவில் இவரும் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அருண் விஜய் தனது திருமண நாளை கொண்டாடியதையொட்டி தியா அருண் விஜய்க்கு வாழ்த்து கூறியதோடு அழகான குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த க்யூட் போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன

தொடர்ந்து ஹிட்
தமிழ் சினிமாவில் இப்பொழுது பட்டையை கிளப்பி வரும் நடிகர் அருண் விஜய் தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்து வருவதோடு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இயக்குனர் ஹரி
தடம், மாஃபியா போன்ற பிளாக்பஸ்டர்களை தொடர்ந்து இப்போது சினம் மற்றும் அக்னி சிறகுகள் போன்ற இரண்டு ஆக்சன் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் அருண் விஜய்யுடன் இணைந்து இயக்குனர் ஹரி தனது அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

திருமண நாள்
பல தடங்கல்கள் தோல்விகள் என அனைத்தையும் சந்தித்து விட்டு இப்பொழுது வீறு கொண்டு தமிழ் சினிமாவை கலக்கி வரும் அருண் விஜய்க்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்ற நிலையில் நேற்று தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

வாழ்த்துக்களை கூறினார்.
அருண்விஜய்யின் திருமண நாளுக்கு பல திரைப்பிரபலங்கள் நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் இவரின் அக்கா மகள் தியாவும் அனைவரும் இருக்கும் குடும்பப்புகைப்படம் ஒன்றை பதிவிட்டு திருமண வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

குடும்பப்புகைப்படம்
தியா இப்பொழுது லண்டனில் படித்து வரும் நிலையில் அப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் விரைவில் இவரை சினிமாவில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க அருண் விஜய்யின் திருமண நாளுக்கு தியா பதிவிட்டுள்ள புகைப்படம் இப்பொழுது லைக்குகளை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











