வாவ்.. வால்வரின் லுக்கில் மெர்சல் காட்டும் அருண் விஜய்.. அந்த படத்திற்காகவா இந்த மாஸ் லுக்?
சென்னை: எக்ஸ்மென் பட ஹீரோ கதாபாத்திரம் வால்வரின் லுக்கில் மெர்சல் காட்டும் அருண் விஜய்யின் அசத்தல் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அருண் விஜய், வில்லனாகவும் ஹீரோவாகவும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி வருகிறார்.

அருவா படத்துக்காக
சமீபத்தில் தான் கெடா மீசை வைத்துக் கொண்டு வில்லேஜ் படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேற லெவல் போட்டோக்கள் வெளியாகி வைரலாகின. சினம் படத்திற்கான டப்பிங் பணிகளின் போது, எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் இன்டர்நெட்டில் பரபரப்பாக பகிரப்பட்டன. மேலும், சூர்யாவுக்கு பதிலாக ஹரி இயக்கும் அருவா படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

வால்வரின் லுக்கில்
இந்நிலையில், தற்போது, கெடா மீசையும், தாடியும் காணாமல் போய் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருக்கும் புது லுக் புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருப்பதை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் வாய் பிளந்து வாவ் சொல்லி பார்த்து வருகின்றனர்.

எக்ஸ்மென்
பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படமான எக்ஸ்மென் படத்தில் வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன் போல இருக்கீங்க என அருண் விஜய் ரசிகர்கள், இரண்டு படங்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து கம்பேர் பண்ணி வருகின்றனர். மேலும், இந்த லுக் உங்களுக்கு செமயா இருக்கு என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

அஜித் பட போஸ்டர்
இதே வால்வரின் லுக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தல அஜித், காங்கேயன் என்ற ஒரு படத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், போஸ்டரை தாண்டி அந்த புராஜெக்ட் நகரவில்லை. இந்நிலையில், அந்த பட போஸ்டர்களையும் பதிவிட்டு, அஜித் ரசிகர்கள், தல போலவே இருக்கீங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் எக்ஸ்மென்
அருண் விஜய்யின் இந்த வால்வரின் லுக்கை பார்த்த சில குசும்புக்கார மீம் க்ரியேட்டர்கள், தமிழ் எக்ஸ்மென் என்ற மீமை உருவாக்கி, நகைச்சுவை நடிகர் செந்தில் பார்ப்பது போல போட்டு கலாய்த்தும் வருகின்றனர். அருண் விஜய் படத்துக்கு படம் தனது உடல் தோற்றத்தை மாற்றி கடின உழைப்பை கொட்டி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்துக்கா
மேலும், அருண் விஜய்யின் இந்த லுக் எந்த படத்திற்காக என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. மாஃபியா படத்தின் அடுத்த பாகமான டெக்ஸ்டர் படத்திற்கா? இல்லை அருவா படத்திற்கா என்ற சந்தேகங்கள் கிளம்பி உள்ளன. நடிகர் அருண் விஜய் அக்னிச் சிறகுகள், சினம், ஏவி 31 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











