தட்டி தூக்குது அருண் விஜய்யின் ‘யானை‘… மூன்று நாள் வசூல்.. இத்தனை கோடியா?

சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்திற்கு நேர்மையான விமர்சனம் கிடைத்து வருவதால், படம் வெளியான 3 நாட்களில் வசூலை தட்டித்தூக்கி உள்ளது.

பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு யானை படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அந்த படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதையும் பெற்றுத்தந்தது. இதையடுத்து, தடம், மாஃபியா போன்ற திரைப்படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

கனகச்சிதமான நடிப்பு

கனகச்சிதமான நடிப்பு

மாஃபியா படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் யானை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். குடும்பம்,காதல் சென்டிமென்ட் கொண்ட திரைப்படத்தில் அருண் விஜய் கனகச்சிதமான நடித்துள்ளார். அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். என்னத்தான் யானை படத்தில் ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடிப்பது பிடித்திருப்பதாகவும், இந்த படத்திற்கு பிறகும் வில்லனாக தொடர்ந்து நடிப்பேன் என்று அருண் விஜய் கூறியுள்ளார்.

யானை படத்தின் ஒன் லைன்

யானை படத்தின் ஒன் லைன்

இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை.. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற வழக்கமான ஹரியின் கதை தான் யானை. இந்த கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் சமமாக உள்ளது. நாயகன் குடும்பம் சந்திக்கும் பிரச்னை... நாயகன் குடும்பம் என்ன ஆனது என்பதை தனக்குரிய பார்முலாவில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் ஹரி.

Recommended Video

Arun Vijay | School Friends தான் நல்லது கெட்டது இரண்டையும் சொல்லுறவங்க | *Interview
தட்டித்தூக்கும் வசூல்

தட்டித்தூக்கும் வசூல்

ஜூலை 1ந் தேதி வெளியான இத்திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் 5 கோடி வசூலாகி உள்ளது. அதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி வசூலானது. வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் மேலும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 5.5கோடியும், தமிழ் நாட்டில் மட்டும் 4.5 கோடி வசூலாகி படம் வெளியான 3 நாளில் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அருண் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து இருப்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X