Don't Miss!
- Automobiles
இந்தியாவுலேயே இதான் பெருசு... 3.5 கி.மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை...
- News
அதிமுகவையே மொத்தமாக புரட்டிப்போட்ட தீர்ப்பு.. யார் இந்த நீதிபதி ஜெயச்சந்திரன்?
- Lifestyle
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு இந்த பொருட்களை வைத்து வழிபடுவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தருமாம்...!
- Technology
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!
- Sports
"சூர்யகுமார் ஒன்றும் அவ்வளவு பெரிய வீரர் இல்லை".. பாக். முன்னாள் வீரர் தாக்கு.. காரணம் பாண்டிங் தான்
- Finance
ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
இந்த வார ரிலீஸ்.. வசூலில் ராக்கெட்ரி, டி ப்ளாக் படங்களை தட்டித் தூக்கிய யானை.. முதல் நாள் நிலவரம்!
சென்னை: அரைத்த மாவையே அரைத்தாலும் அதற்கும் வேணும் தனித் திறமை என சீமராஜா படத்தில் வரும் பாடல் இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய்யின் யானை படத்திற்கு அப்படியே பொருந்தியுள்ளது.
மாதவனின் நம்பி நாராயணன் பயோபிக்கிற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனத்தில் பாதி கூட அருண் விஜய்யின் யானை படத்திற்கு கிடைக்கவில்லை.
ஆனால், இந்த வாரம் வெளியான 3 படங்க்ளில் அதிக வசூலை ஈட்டி கம்பீரமாக முதலிடத்தை பிடித்திருக்கிறது யானை திரைப்படம்.
என்னது...கமலுக்கு
டைரக்டர்
ஹரி
வாழ்க்கை
கொடுத்தாரா?...கொல
காண்டான
கமல்
ஃபேன்ஸ்

ராக்கெட்ரி வசூல்
மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், ஒட்டுமொத்தமாக உலகளவில் வெறும் 3.5 முதல் 4 கோடி வரை தான் வசூல் என்கின்றனர். தமிழ், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் ராக்கெட்ரி திரைப்படம் வெளியானது. தேச துரோகி என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இந்திய விஞ்ஞானியின் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை. இது அவார்டு படம்ப்பா என வெகுஜன ரசிகர்கள் ராக்கெட்ரியை ஒதுக்கி விட்டார்களோ என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

டி ப்ளாக் வசூல்
எருமைசாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி, அவந்திகா நடிப்பில் வெளியான சைக்கோ த்ரில்லர் படமான டி ப்ளாக் முதல் நாளில் வெறும் 40 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் பட்ஜெட்டும் 9 கோடிக்குள் தான் என்கின்றனர். அந்த தொகையையாவது படம் ஈட்டுமா என்பது சந்தேகம் என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் வெறும் 20 சதவீதத்திற்கு குறைவான ஆக்குபன்சியே இருப்பது தான் இதற்கு காரணம் என்கின்றனர்.

முதலிடத்தில் யானை
இந்த வாரம் வெளியான 3 படங்களில் விமர்சன ரீதியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ள அருண் விஜய்யின் யானை திரைப்படம் வசூல் ரீதியாக முதலிடத்தை பிடித்திருக்கிறது. இயக்குநர் ஹரி 3.5 ஆண்டுகள் கழித்து படத்தை வெளியிட்டுள்ள நிலையில், ஹரியின் பழைய ஃபார்முலா, மசாலா, குடும்ப சண்டை, ஆக்ஷன் காட்சிகள், காமெடி என்பதை பார்க்க ஆடியன்ஸ் திரண்டதே இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதற்கான காரணம் என்கின்றனர்.

முதல் நாள் வசூல்
உலகம் முழுவதும் மொத்தம் 1500 ஸ்க்ரீன்களில் வெளியான யானை திரைப்படம் தமிழ்நாட்டில் 4 கோடி ரூபாய் வசூலும், ஒட்டுமொத்தமாக 5 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் புரமோஷனுக்காக கமல்ஹாசனை போல அருண் விஜய்யும் மலேசியாவுக்கெல்லாம் சென்றது குறிப்பிடத்தக்கது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் படத்தின் புக்கிங் 80 சதவீதமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முதல் வாரத்தின் முடிவில் 15 கோடிக்கும் அதிகமான வசூலை யானை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.