“யானை“ மேக்கிங் வீடியோ..அட அந்த சீனை இப்படித்தான் எடுத்தாங்களா? வியந்து பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் அருண்விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Recommended Video
பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு யானை படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் அருண்விஜய்
நடிகர் அருண்விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அந்த படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதையும் பெற்றுத்தந்தது. இதையடுத்து, தடம், மாஃபியா போன்ற திரைப்படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

யானை
மாஃபியா படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய் யானை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். குடும்பம்,காதல் சென்டிமென்ட் கொண்ட திரைப்படத்தில் அருண் விஜய் கனகச்சிதமான நடித்துள்ளார். அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். என்னத்தான் யானை படத்தில் ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடிப்பது பிடித்திருப்பதாகவும், இந்த படத்திற்கு பிறகும் வில்லனாக தொடர்ந்து நடிப்பேன் என்று அருண்விஜய் கூறியுள்ளார்.

ஹரியின் வழக்கமான கதை
இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை.. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற வழக்கமான ஹரியின் கதை தான் யானை. இந்த கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் சமமாக உள்ளது. நாயகன் குடும்பம் சந்திக்கும் பிரச்னை... நாயகன் குடும்பம் என்ன ஆனது என்பதை தனக்குரிய பார்முலாவில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் ஹரி.
மிரட்டலான வீடியோ
ஜூலை 1ந் தேதி வெளியான திரைப்படத்தில் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு இருந்து வருவதால் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், யானை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் திரையரங்கில் கைதட்டலை பெற்ற சண்டை காட்சி சீன் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் படத்தை விட மேக்கிங் வீடியோ வேறலெவலில் மிரட்டலாக உள்ளதாக கூறியுள்ளனர். இணையத்தில் இந்த வீடியோ டிராண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











