பொங்கலுக்கு வெளியாகும் அருண் விஜய்யின் யானை முக்கிய அப்டேட்!

சென்னை: இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் யானை.

முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார்.

சமீபத்தில் டீசர் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்ட சூழலில் இப்பொழுது யானை படத்தின் முக்கிய அப்டேட்டை பொங்கலுக்கு படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலை அள்ளுகிறது. மேலும் இவரது திரைப்படங்கள் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது அந்த வகையில் தொடர்ந்து தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வரும் அருண் விஜய் முதல் முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் யானை

ஆக்ஷன் கலந்த குடும்ப பின்னணியில்

ஆக்ஷன் கலந்த குடும்ப பின்னணியில்

தொடர்ந்து கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்து வரும் இயக்குனர் ஹரி முதல் முறையாக அருண் விஜய் உடன் யானை படத்தில் இணைந்து இருக்க இந்த திரைப்படமும் இவரது வழக்கமான ஆக்ஷன் கலந்த குடும்ப பின்னணியில் உருவாகி உள்ளது. தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் யானை படத்தின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் வேட்டி சட்டையில் கம்பீரமாக அருண் விஜய் நடித்துள்ளார் . இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

கே.ஜி.எஃப் படப் புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக

கே.ஜி.எஃப் படப் புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக

மேலும் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி யோகிபாபு, தலைவாசல் விஜய், மூத்த நடிகர் ராஜேஷ், இமான் அண்ணாச்சி, 'குக் வித் கோமாளி' புகழ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் படப் புகழ் ராமச்சந்திர ராஜு முக்கிய வில்லனாக நடித்துள்ளார். டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது

பொங்கலை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது

சமீபத்தில் யானை படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டது. அதிரடியான வசனங்கள் மழையில் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் என அருண் விஜய் தெறிக்க விட்டிருந்தார் . இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் யானை படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு பொங்கல் அன்று வெளியிட உள்ளது. அதன்படி ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் ஜனவரி 13-ஆம் தேதி யானை ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X