கஷ்டப்பட்டதுக்கெல்லாம் பலன் கிடைச்சிருக்கு.. இது அருண் விஜய்யின் யானை விமர்சனம்!

சென்னை: விக்ரமின் சாமி ஸ்கொயர் படம் ஃப்ளாப் ஆன நிலையில், அடுத்ததாக சூர்யாவுடன் அருவா படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் ஹரி. ஆனால், அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், மலையேறினாலும் மச்சான் துணை வேண்டும் என கைகொடுத்த அருண் விஜய்க்கு கச்சிதமாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறாரா இயக்குநர் ஹரி என்கிற கேள்விக்கு விடையாக இன்று வெளியாகி உள்ள படம் தான் யானை.

மாதவனின் ராக்கெட்ரி படம் நம்பி நாராயணின் பயோபிக்காக வெளியாகி உள்ளது. அருள்நிதியின் டி ப்ளாக் ஹாரர் த்ரில்லராக வெளியாகி உள்ள நிலையில், கமர்ஷியல் ரசிகர்களுக்காக வெளியாகி உள்ள படம் தான் இந்த யானை.

இந்நிலையில், படத்தை காலையிலேயே ரசிகர்களுடன் பார்த்த நடிகர் அருண் விஜய் படம் பற்றி சொல்லி இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

அருண் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் பனிப்போர் என சர்ச்சை கிளம்பிய நிலையில், காலையிலேயே சிவகார்த்திகேயன் முதல் ட்வீட்டாக போட்டு யானை படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் என போட்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் அருண் விஜய் ரசிகர்கள் என பலரும் யானை படத்திற்கு ஆதரவு அளித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஹரி இஸ் பேக்

ஹரி இஸ் பேக்

சாமி, வேல், ஐயா, தாமிரபரணி, சிங்கம் சீரிஸ் என கமர்ஷியல் படங்களாக இயக்கி தமிழ் சினிமாவை கலக்கிய இயக்குநர் ஹரி மீண்டும் நான் திரும்ப வந்துட்டேன்னு யானை பாம் மூலமாக தனது பலத்தை நிரூபிக்க முயற்சித்துள்ளார். விஷாலின் தாமிரபரணி படத்தை லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்தால் எப்படி இருக்குமோ? அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கிறது என்றாலும், மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் ஹரி.

அருண் விஜய் ஹேப்பி

அருண் விஜய் ஹேப்பி

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை ரசிகர்களுடன் பார்த்து விட்டு அவர்கள் கொடுத்த ஆதரவை பார்த்து கதறியழுத அருண் விஜய் இன்று மீண்டும் தியேட்டரில் ரசிகர்களுடன் யானை படத்தின் FDFS படம் பார்த்த அருண் விஜய் ரொம்பவே சந்தோஷப்பட்டு பேசியுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. காலையிலேயே படத்திற்கு ஆசி வழங்கி அவரது அப்பா விஜயகுமார் வாழ்த்தி அனுப்பி வைத்ததையும் கலாட்டா யூடியூப் சேனல் கவர் செய்திருந்தது.

 அருண் விஜய்யின் யானை விமர்சனம்

அருண் விஜய்யின் யானை விமர்சனம்

படம் முடிந்து வெளியே வந்த நிலையில், படம் எப்படி இருக்கு என அருண் விஜய்யிடம் பல மைக்குகள் நீட்டப்பட்ட நிலையில், ரொம்ப சந்தோஷமாக இருக்கு, பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைச்சிருக்குன்னு நம்புறேன். எதிர்பார்த்த இடங்களை விட பல இடங்களில் ரசிகர்கள் கைதட்டியது மனதை ரொம்பவே உற்சாகப்படுத்தி உள்ளது என யானை படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்கிற தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X