யானை இரண்டாவது சிங்கிள் " போதையை விட்டு வாலே" லிரிக்ஸ் பாடல் வெளியானது!

சென்னை: நடிகர் அருண் விஜய்யின் வெறித்தனமான நடிப்பில் இயக்குனர் ஹரியின் மிரட்டலான இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் யானை

யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், சமுத்திரக்கனி, ராதிகா என மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர்

யானை படத்தின் இரண்டாவது சிங்கிள் போதையை விட்டு வாலே லிரிக்ஸ் பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அருண் விஜய்யுடன் முதல் முறையாக கூட்டணி

அருண் விஜய்யுடன் முதல் முறையாக கூட்டணி

விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஹரி. சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களின் திரைப் படங்களை இவர் இயக்கியுள்ளார். ஹரியின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சக்கைபோடு போட்டு வருகிறது அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பட்டையை கிளப்பியது. இந்தநிலையில் ஹரி இப்பொழுது முதன்முறையாக அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து யானை என்ற படத்தை இயக்கி வருகிறார்

யானை

யானை

நடிகர் அருண் விஜய் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார் . தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி மிரட்டி வரும் அருண் விஜய் முதல் முறையாக ஹரி இயக்கத்தில் யானை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். யானை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரி மற்றும் அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார்

டிரம்ஸ்டிக்ஸ் புரோடக்சன்ஸ்

டிரம்ஸ்டிக்ஸ் புரோடக்சன்ஸ்

தூத்துக்குடி,நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் புரோடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமுத்திரக்கனியை, ராதிகா யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜூ உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இரண்டாவது சிங்கிள்

இரண்டாவது சிங்கிள்

யானை படத்திலிருந்து முதல் அங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது இரண்டாவது சிங்கிள் போதையை விட்டு வாலே வெளியாகி உள்ளது. கருத்து சொல்லும் குத்து பாடலாக வெளியாகியுள்ள இந்த பாடலை தெருக்குறள் அறிவு எழுதியுள்ளார், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சந்தோஷ் ஹரிஹரன்,ஜி வி பிரகாஷ் குமார் அறிவு ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X