அஜித் படம் பட்டைய கிளப்பும்: அருண் விஜய்
அஜித்தோடு நான் நடித்து வரும் படம் கண்டிப்பாக பட்டைய கிளப்பும் என்று அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்து வரும் 55வது திரைப்படத்தில் அவருடன், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை கெளதம்மேனன் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார். ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அனுஷ்கா, அஜீத் டூயட் காட்சிகள் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா சென்றுள்ள த்ரிஷா சென்னை திரும்பிய பின், அஜித் - த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

அமைதி காத்த அருண் விஜய்
அஜீத்துடன் தான் நடித்து வரும் வேடம் குறித்து இதுவரை எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருந்தார் அருண்விஜய்.

அஜீத்துக்கு வில்லன்
ஆனால் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் நடித்து வருகிறார். என்று விருதுகள் வழங்கும் விழாவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்தார்.

ஆச்சரியமான வேடம்
இந்நிலையில் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், " கெளதம் சார் படத்தில் நான் என்ன வேடத்தில் நடித்து வருகிறேன் என்பதை விளக்கி கூற முடியாது. ஆனால் கண்டிப்பாக ஆச்சர்யமாக இருக்கும்.

பட்டையை கிளப்பும்
சமீபத்தில் தயாரிப்பாளர் ரத்னம் விருது வழங்கும் விழாவில் என்னுடைய வேடம் குறித்து கூறினார். அந்த அரங்கமே சத்தமிட்டதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அஜித் சார் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "இப்படம் கண்டிப்பாக பட்டைய கிளப்பும்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











