மீசையை காணோம்.. புது ஹேர் ஸ்டைல்.. ஆளே மாறிய அருண் விஜய்! புதுப்பட கெட்டப்பா பாஸ்!

Recommended Video

MAFIA MOVIE PRESS MEET | ARUN VIJAY | PRIYA BHAVANI SHANKAR | FILMIBEAT TAMIL

சென்னை: கோலிவுட்டில் பிசியான நடிகர்களில் தற்போது, முக்கியமான நபராக நடிகர் அருண் விஜய் வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான தடம் படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அருண் விஜய் பாக்கெட்டில் ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

வரும் 21ம் தேதி, லைகா நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் அருண் விஜய், தற்போது தனது புதிய கெட்டப்பை ரிவீல் செய்துள்ளார்.

5 வருஷம்

5 வருஷம்

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகின்றன. அருண் விஜய் 2.0 இந்த 5 ஆண்டுகளில் வேற அளவிலான அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறார். குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், சாஹோ, தடம் என பல பிளாக்பஸ்டர் ஹிட்களை அருண் விஜய் கொடுத்து வருகிறார்.

வெற்றி தடம்

வெற்றி தடம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, பல படங்களில் அடுத்தடுத்து கமீட் ஆகி உள்ளார் அருண் விஜய். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஃபியா படம் இந்த ஆண்டு அருண் விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றி தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீசை இல்லாமல்

மாஃபியா படத்தில் மீசை, தாடி வைத்து கம்பீரமான ஹண்டர் ஆர்யானாக அருண் விஜய் நடித்துள்ளார். மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக பிரசன்னாவும், நாயகியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். இந்நிலையில், மீசை இல்லாமல், புது ஹேர் ஸ்டைலில் ஹேண்ட்ஸம் ஹன்க்காக மாறியுள்ள புதிய புகைப்படத்தை அருண் விஜய் ஷேர் செய்துள்ளார்.

அடுத்து ஹாலிவுட்டுக்கா

கோலிவுட்டில் கலக்கி வந்த நடிகர் அருண் விஜய், பிரபாஸின் சாஹோ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். சாஹோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்க வில்லை என்றாலும், அருண் விஜய்யின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த புது கெட்டப்பை பார்த்த அருண் விஜய் ரசிகர் ஒருவர், ஹாலிவுட் தரம் தலைவா என கமெண்ட் செய்துள்ளார்.

பாக்ஸர் படம் என்னாச்சு?

மாஃபியா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் அருண் விஜய், சினம், ஏவி 31 மற்றும் பாக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில புதிய படங்களில் கமீட் ஆகி உள்ளார் அருண் விஜய். அருண் விஜய்யின் இந்த புதிய கெட்டப்பை பார்த்த இந்த ரசிகர், சூப்பர் அண்ணா, பாக்ஸர் படம் குறித்த அப்டேட் என்னாச்சு? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

கண்டிப்பா பிளாக்பஸ்டர்

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி, தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன், இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான நரகாசூரன் படம் இன்னமும் தயாரிப்பு பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில், லைகா தயாரிப்பில் 3வது படமாக உருவாகி உள்ள மாஃபியா படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X