யானை படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்... போட்டோவுடன் வெளியானது சூப்பர் அப்டேட்!

சென்னை : நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படமாக உருவாகி வருகிறது யானை.

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் குடும்ப பின்னணியில் ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகி வருகிறது.

சென்ற வாரம் நடிகை ராதிகா தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் முடித்ததைத் தொடர்ந்து இப்பொழுது அருண் விஜய் யானை படத்தின் டப்பிங்கை துவங்கியுள்ளார்.

குடும்ப பின்னணியில்

குடும்ப பின்னணியில்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் இப்போது குடும்ப பின்னணியில் ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகி வருகிறது யானை. சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குனர் ஹரி அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் இந்தப்படம் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இன்று வரை தொடங்கப்படாமல் உள்ளது

மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம்

மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம்

அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி மிக நெருங்கிய உறவுக்காரர்களாகவே இருந்தாலும் இன்று வரை எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக யானை படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கிராமத்து கதை களத்தில் குடும்ப திரைப்படமாக உருவாகி வரும் யானை படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அந்த வகையில் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகிபாபு, கேஜிஎஃப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு,போஸ் வெங்கட், சஞ்சீவி,தலைவாசல் விஜய், ராஜேஷ், இமான் அண்ணாச்சி, குக் வித் கோமாளி புகழ், அபிராமி அம்மு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யானை

யானை

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டப்பிங் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்ற வாரம் நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் செய்து முடித்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.

டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார்

டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இப்பொழுது அருண் விஜய் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக்கொண்டே எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X