அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!

சென்னை: அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் தனது 31வது படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் ராகவேந்திரா தயாரித்துள்ளார், சாம் c.s. இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா கஸண்ட்ரா நடித்துள்ளார்.

2ம் முறை கூட்டணி

2ம் முறை கூட்டணி

இதற்கு முன் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் குற்றம் 23 படத்தில் நடித்திருந்தார். மருத்துவ துறை சார்ந்த த்ரில்லர் படமாக குற்றம் 23 வெளியாகி பெரிய ஆதரவை பெற்றதை தொடர்ந்து அறிவழகனுடன் 2ம் முறை கூட்டணி சேர்ந்துள்ளார் அருண்விஜய்.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் என அருண் விஜயின் படங்கள் வரிசையாக வெளிவரவுள்ளன. இதைத்தொடர்ந்து தனது 33வது படத்தில் இயக்குனர் ஹரியுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றவுள்ளார் அருண்விஜய்.

டப்பிங் பணி

டப்பிங் பணி

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. தற்போது படக்குழு போஸ்ட் ப்ரோடுக்ஷன் & டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தின் டப்பிங் பணியை அருண்விஜய் நேற்று தொடங்கினார், அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சம்மர் ரிலிஸ்

சம்மர் ரிலிஸ்

#AV31 என இதுவரை இந்த படம் பெயரிடபடாமல் உள்ளது. இப்படம் உளவு சம்பந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது என சில தகவல்கள் வெளிவந்துள்ளன. படக்குழு இந்த படத்தை சம்மரில் ரிலிஸ் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X