சத்யராஜ், பார்த்திபன் உடன் விமானத்தில் அருண் விஜய்.. ரெட்ட தல ஹீரோ ரெண்டு லெஜண்ட் பக்கத்துல!
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களில் வில்லனாகவும் அவர் நடித்து மாஸ் காட்டியுள்ளார். கடைசியாக அருன் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வணங்கான் திரைப்படம் அவருக்கு பாராட்டுக்களையும் சில விருதுகளையும் பெற்றுத் தந்தது.
பொங்கலுக்கு வெளியான வணங்கான் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் நல்ல படம் என்றும் அருண் விஜய்யின் நடிப்பு சூப்பர் என்றும் பலரையும் பாராட்ட வைத்தது. மாற்றுத் திறனாளியாகவே அந்த படத்தில் அருண் விஜய் வாழ்ந்திருந்தார்.

அடுத்ததாக ரெட்ட தல படத்தில் நடித்து வரும் அருண் விஜய் விமானத்தில் செல்லும் போது நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பார்த்திபனை சந்தித்த நிலையில், அவர்களுடன் செல்ஃபி எடுத்து அதை சந்தோஷமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கூலி படத்தில் சத்யராஜ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் கூலி படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். மிஸ்டர் பாரத் படத்துக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான சிக்கந்தர் படத்திலும் சத்யராஜ் தான் மெயின் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில், படுபிசியாக இருந்து வரும் சத்யராஜ் தற்போது அருண் விஜய்யை சந்தித்துள்ளார்.
சத்யராஜ், பார்த்திபனுடன் செல்ஃபி: வணங்கான் படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல படம் உருவாகி வருகிறது. அந்த படத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், விமானத்தில் செல்லும் போது சத்யராஜ் மற்றும் பார்த்திபனை சந்தித்த அருண் விஜய் அவர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

செம ஃபன்: சத்யராஜ் சார் மற்றும் பார்த்திபன் அண்ணாவுடன் ரொம்ப நாள் கழித்து சந்தித்ததில் செம ஃபன்னான தருணத்தை அனுபவித்தேன் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு அருன் விஜய் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தனுஷுடன் இட்லி கடை: தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இட்லி கடை படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், ரெட்ட தல படத்தில் அருண் விஜய்க்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருப்பதும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருண் விஜய்க்கு ரெட்ட தல படம் ஹிட் படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும், இந்த ஆண்டு இட்லி கடை படம் அருன் விஜய்க்கு தரமான சம்பவமாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











