அருண் விஜய்யை குத்த வரும் ரித்திகா!

சென்னை: அருண் விஜயின் பாக்சர் படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

தடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தற்போது பிரபாசுடன் சாஹோ', விஜய் ஆண்டனியுடன் அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது பாக்சர் படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இப்படத்தை இயக்குகிறார்.

குத்துச்சண்டை படம்

குத்துச்சண்டை படம்

படத்தின் தலைப்பிலிருந்தே குத்துச்சண்டை தொடர்பான படம் என்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸில் சிறப்பு பயிற்சிகள் பெற்று வரும் அருண் விஜய், மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளரும், 7-ம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த ஜானி ட்ரிங்குயேன் உடன் உள்ள புகைப்படத்தை கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

வீடியோ

வீடியோ

தற்போது வியட்நாமில் மிக்ஸ்டு மார்டியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று வரும் அருண் விஜய், இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு மாத கால பயிற்சி

ஒரு மாத கால பயிற்சி

இதுகுறித்து படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, "அருண் விஜய் ஒரு மாத கால நீண்ட பயிற்சியில் இருந்தார். நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதில் அருண் விஜய் ஒரு பரிபூரணவாதி என்று அனைவருக்கும் தெரியும். நம் "பாக்ஸர்" படத்திற்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

8 மணி நேர பயிற்சி

8 மணி நேர பயிற்சி

பீட்டர் ஹெயின் மாஸ்டர் பரிந்துரைக்கு இணங்க, வியட்நாமில் உள்ள லின் பாங்கில் பயிற்சி பெற்றார். அருண் விஜய் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து அங்கு பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர் மிகவும் கூலாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.

ரித்திகா சிங்

ரித்திகா சிங்

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ‘'இறுதிச்சுற்று ரித்திகா சிங்'' விளையாட்டு பத்திரிகையாளராக நடிக்கிறார். இவர் அடிப்படையில் குத்துச்சண்டை வீராங்கனை என்பது அனைவரும் அறிந்ததே.

எதிர்பார்த்த வெற்றி இல்லை

எதிர்பார்த்த வெற்றி இல்லை

இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தாலும் அவை எதிர் பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மீண்டும் குத்துச்சண்டை தொடர்பான படம் அவருக்கு கை கொடுக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

முந்துமா

முந்துமா

இறுதிச் சுற்றுக்கு முன்பும் கூட பல குத்துச் சண்டை படங்கள் வந்துள்ளன. ஆனால் இறுதிச் சுற்றில் நடித்த ரித்திகா உண்மையிலேயே குத்துச் சண்டை வீராங்கனை என்பதால் அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது, எதார்த்தமான படமாகவும் அமைந்தது. அந்தப் படத்தை அருண் விஜய் - ரித்திகா ஜோடியில் உருவாகும் இந்தப் படம் முந்துமா முறியடிக்குமா என்பது எதிர்பார்ப்புக்குரியது. பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X