அந்த படத்தை OTT ரிலிஸ் பண்ண வேண்டாம் - நடிகர் அருண் விஜய் கோரிக்கை
சென்னை: அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தான் பார்டர். இந்த படம் அருண் விஜய்க்கு 31வது படமாகும்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி பட்டேல், ரெஜினா நடித்துள்ளனர். சாம் c.s. இசையமைத்துள்ளார்.
குற்றம் 23 படத்துக்கு பிறகு மீண்டும் அருண் விஜய் - அறிவழகன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.

தயாரிப்பு நிறுவனங்கள்
கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் நிலையில் பல திரைப்படங்கள் பின் வாங்க தொடங்கியுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் விளைவாக மீண்டும் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் OTT யை தயாரிப்பு நிறுவனங்கள் நாடி வருகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்நிலையில் அருண் விஜய்க்கு நிறைய படங்கள் வரிசையில் வெளிவர காத்துள்ளது. சினம், அக்னி சிறகுகள், சூர்யா தயாரிக்கும் படம், பாக்ஸர், ஹரி இயக்கும் படம் என படங்கள் வரிசையில் உள்ள நிலையில் அருண் விஜயின் ரசிகர்கள் வரவிருக்கும் படங்களை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

நம்பிக்கை அளிக்கிறார்
அருண் விஜய் - அறிவழகன் கூட்டணியில் இதற்குமுன் வெளிவந்த படம் குற்றம் 23. மெடிக்கல் த்ரில்லரான குற்றம் 23 திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் என்பதால் குறிப்பாக இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

அருண் விஜய் கோரிக்கை
இந்த படத்தின் Theatrical Rights உரிமையை 11:11 ப்ரோடுக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தயாரிப்பாளர் இந்த படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட முடிவு செய்துள்ளார் என தெரிகிறது. இந்த படத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அருண் விஜய் OTTயில் ரிலிஸ் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து படக்குழு என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான்


Click it and Unblock the Notifications











