வணங்கான் ஸ்கிரிப்ட்டுடன் பாலா... இன்னொரு பக்கம் அஜித்...: நடுவில் தவிக்கும் அருண் விஜய்!
சென்னை: 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருகிறார் அருண் விஜய்.
ஆனாலும், கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர் என்ற அடையாளம் அவருக்கு கிடைத்துள்ளது.
தடையற தாக்க, தடம், என்னை அறிந்தால் போன்ற படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த அருண் விஜய், தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது பாலாவின் வணங்கான், அஜித்தின் ஏகே 62 என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், கால்ஷீட் இல்லாமல் தடுமாறி வருவதாகக் கூறப்படுகிறது.

கம்பேக் கொடுத்த அருண் விஜய்
1995ம் ஆண்டு முறை மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமான அருண் விஜய், கடந்த சில வருடங்களாக தான் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் தடையற தாக்க, தடம், அஜித்துடன் என்னை அறிந்தால் ஆகிய படங்கள் தான் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தன. இந்நிலையில், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

வணங்கான் படத்தில் அருண் விஜய்
கடந்தாண்டு அருண் விஜய் நடிப்பில் யானை, சினம், ஓ மை டாக் ஆகிய படங்களும், தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸும் வெளியாகின. இந்நிலையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே ட்ராப் ஆனது. பல வருடங்களுக்குப் பிறகு வணங்கான் திரைப்படத்திற்காக சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணைந்தது. சூர்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க, இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட் ஆனார். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென வணங்கான் கைவிடப்படுவதாக பாலா அறிவித்தார்.

இன்னொரு பக்கம் அஜித்தின் அன்பு கட்டளை
அதேபோல், சூர்யாவும் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் வணங்கான் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய்யை நடிக்க வைக்கலாம் என பாலா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பல வருடங்களாக தோல்வியின் பிடியில் இருந்த அருண் விஜய், முதன்முறையாக பாலாவுடன் இணைய ரெடியாகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதனிடையே தற்போது அஜித்தின் ஏகே 62 படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கால்ஷீட் குழப்பத்தில் அருண் விஜய்
அஜித் - கெளதம் மேனன் கூட்டணியில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். விக்டர் என்ற அருண் விஜய்யின் கேரக்டர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அருண் விஜய்யின் கேரியரும் வேகமெடுத்தது. அதேபோல், அருண் விஜய்க்கு தடையற தாக்க, தடம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி. அவர் தான் அஜித்தின் ஏகே 62 படத்தையும் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அப்டேட் வெளியாகும்
முதன்முறையாக பாலா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு, இன்னொரு பக்கம் அஜித், மகிழ் திருமேனியின் அன்புக் கட்டளை. இப்படி இரண்டுக்கும் நடுவில் அருண் விஜய் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. வணங்கான், ஏகே 62 படங்களுக்கு ஒரே நேரத்தில் கால்ஷீட் தேவைப்படுவதால், இரண்டில் எதில் கமிட் ஆகலாம் என அருண் விஜய் தீவிரமாக யோசித்து வருகிறாராம். அதனால், விரைவில் அருண் விஜய்யின் சம்மதம் குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











