தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக இந்த நடிகரா?.. இது புதுசா இருக்கே.. நடிகருக்கு வாழ்வுதான்
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதி படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது.
மக்களவைத் தேர்தல்: சூழல் இப்படி இருக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதன் காரணமாக அரசியல் களத்தில் பிஸியாகியிருக்கிறார் கமல் ஹாசன். அரசியலில் தற்போது அவர் கவனம் செலுத்த இருப்பதால் தக் லைஃப் படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மற்றவர்களை வைத்து மீதமிருக்கும் போர்ஷன்களை முடிக்கு திட்டத்திலும் மணிரத்னம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஷூட்டிங்கை தள்ளிப்போட்டிருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது.
இந்த நடிகர் நடிக்கிறாரா?: இதற்கிடையே தக் லைஃப் படத்தில் முதலில் துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கமிட்டாகியிருந்தார்கள். பிறகு சில காரணங்களால் அவர்கள் இரண்டு பேரும் படத்திலிருந்து விலகினார்கள். இதனையடுத்து படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. தற்போது படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சிம்பு நடிப்பதாக இருந்த ரோலில் அருண் விஜய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அருண் விஜய் இப்போது வணங்கான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











