For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முருகா...யானையை காப்பாத்துப்பா...தீயாய் பரவும் அருண் விஜய் போட்டோஸ்

  |

  சென்னை : டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. கிராமத்து, ஆக்ஷன், சென்டிமென்ட் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு த்ரில்லிங் கலந்தும் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

  பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அம்மு அபிராபி, தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை Drumsticks Productions தயாரித்துள்ளது.

  கேஜிஎஃப் படத்தில் கருடன் ரோலில் மிரட்டிய கன்னட நடிகர் ராமச்சந்திர ராஜு, இந்த படத்தின் மூலம் தமிழிலும் வில்லனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக யானை படம் உள்ளது.

   டைரக்டர் ஆகலேன்னா இந்த வேலைக்கு தான் போயிருப்பேன்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில பாத்தீங்களா? டைரக்டர் ஆகலேன்னா இந்த வேலைக்கு தான் போயிருப்பேன்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில பாத்தீங்களா?

  விக்ரமிற்காக ஒதுங்கி வழிவிட்ட யானை

  விக்ரமிற்காக ஒதுங்கி வழிவிட்ட யானை

  ஜுன் மாதமே யானை படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டு, இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால், ஜுன் 3ம் தேதி வெளியான கமலின் விக்ரம் படம் வசூலில் அடித்து நொறுக்கி வந்ததால், அதற்கு மரியாதை கொடுத்து தங்களின் படத்தை தள்ளி வைப்பதாக கடைசி நிமிடத்தில் படக்குழு அறிவித்தது. கிட்டதட்ட 2 வாரங்கள் ரிலீசை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

  யானை எப்போ வருது

  யானை எப்போ வருது

  யானை படத்தை ஜுலை 1 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்த படக்குழு, கமலையும் நேரில் சந்தித்து, விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், விக்ரம் படத்திற்காக தாங்கள் யானை ரிலீசை தள்ளி வைப்பதாக கமலிடமும் சொல்லி உள்ளனர். இதற்காக யானை படக்குழுவிற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். யானை படம் வெற்றி அடையவும் கமல் வாழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

  யானைக்கு யு/ஏ சான்று

  யானைக்கு யு/ஏ சான்று

  படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், யானை படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளது. யானை படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ சேனல் வாங்கி உள்ளது. இதன் டிஜிட்டல் ஒளிரப்பு உரிமத்தை ஜீ வாங்கி உள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு ஜீ 5 ஓடிடி தளத்தில் யானை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் ரிலீசிற்கு பிறகு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

  தீவிர ப்ரோமோஷன்

  தீவிர ப்ரோமோஷன்

  யானை படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. தினமும் ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆரம்பத்தில் இவை டிரைலரில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் தானே என ரசிகர்கள் சாதாரணமாக இருந்தனர். ஆனால் பல புதிய சீன்களையும் புகுத்தி, அனைவரையும் படக்குழு ஆச்சரியப்பட வைத்துள்ளது.

  மலேசியாவில் அருண் விஜய்

  மலேசியாவில் அருண் விஜய்

  யானை படத்தின் ப்ரொமோஷனுக்காக அருண் விஜய் மலேசியா சென்றுள்ளார். அங்கு தன்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு கொடுப்பதற்காக தானே கையெழுத்திட்ட யானை பட போஸ்டர்களை தயார் செய்து வரும் வீடியோவை அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் அருண் விஜய் சாமி தரிசனம் செய்த போட்டோக்களை பகிர்ந்தார். இந்த போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

  English summary
  Arun Vijay starred Yaanai movie will released on July 1st. Promotion works are going on in full fledge. Now Arun Vijay is in Malayasia for movie promotion. Today he visit famous Batu caves Murugan temple for this upcoming movie's success. He shared this photos in social media. This photos become trending in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X