அருண் விஜய்யின் யானை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ஏலம்மா ஏலே வெளியானது!

சென்னை: நடிகர் அருண் விஜய் முதல் முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் யானை
முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் குடும்ப கதைகள் அத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது

மிக விரைவிலேயே திரையில் வெளியாக உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏலம்மா ஏலே தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது

குடும்பங்களுடன் சென்று பார்க்கலாம்

குடும்பங்களுடன் சென்று பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக தற்போது அதிரடி காட்டி வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் இப்பொழுது இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்ரம், சூர்யா, விஷால் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் ஹரியின் திரைப்படங்கள் என்றாலே மினிமம் கேரன்டி உடன் குடும்பங்களுடன் சென்று பார்க்கலாம்.

பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில்

பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில்

அதில் கிராமத்து கதைக் களமும் குடும்ப பாசப்பிணைப்பு என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். அதே ஃபார்முலாவில் தற்போது யானை திரைப்படம் உருவாகி வருகிறது. கதைகளில் தீவிரமாக கவனம் செலுத்திவந்த அருண்விஜய் யானை படத்தில் பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி,ராதிகா சரத்குமார், ராமச்சந்திர ராஜூ யோகி பாபு, அம்மு அபிராமி , ஆடுகளம் நரேன்,இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகை பிரியா பவானி சங்கர் இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிள்ளையார் சிலையை ஏந்தியவாறு

பிள்ளையார் சிலையை ஏந்தியவாறு

சமீபத்தில் யானை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதிரடியான வசனங்கள் மழையில் சொட்டச்சொட்ட நனைந்து கொண்டு சண்டைக்காட்சிகளில் கட்டுமஸ்தான உடம்புடன் அருண் விஜய் கையில் பிள்ளையார் சிலையை ஏந்தியவாறு மழை நீரில் நனைந்து வந்து ரவுடிகளை துவம்சம் செய்கின்றவாறு வெளியான யானை டீசர் இப்பொழுது மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து இணையதளத்தில் மாஸ் காட்டுகிறது

ஏலம்மா ஏலே

ஏலம்மா ஏலே

இந்த நிலையில் யானை படத்தின் அடுத்த அப்டேட் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக படக்குழு தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது. ஏலம்மா ஏலே என்ற பாடலை கவிஞர் சினேகன் எழுதியிருக்க ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஆர்யா தயால் இப்பாடலை பாடியுள்ளார். மிகவும் மென்மையான கிராமத்து மண் வாசனையுடன் கூடிய காதல் பாடலாக வெளியாகியுள்ள "ஏலம்மா ஏலே" தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X