அருண் விஜய்யின் யானை டீஸர் குறித்த முக்கிய அப்டேட் கசிந்தது!
சென்னை: நடிகர் அருண் விஜய் இயக்குனர் ஹரி முதல் முறையாக கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் யானை.
ராதிகா சரத்குமார், தலைவாசல், விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ,கேஜிஎஃப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மொத்தமும் முடிந்து இப்போது டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க யானை படத்தின் டீஸர் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது

தொடர்ந்து ஆக்ஷன் படங்களில்
நடிகர் அருண் விஜய்யின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெற்று வருவதால் பல மொழி ரசிகர்களும் இவரது படங்களை ஆர்வமாக ரசித்து வருகின்றனர். குற்றம் 23, தடம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது மார்க்கெட்டை மற்ற மொழிகளிலும் உயர்த்தியது. இந்த நிலையில் கைவசம் தற்போது அக்னி சிறகுகள்,யானை, சினம் பார்டர், பாக்சர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து ஒரு சினிமாவில் ஆக்சன் கதாநாயகனாகவும் உருவெடுத்துள்ளார்.

டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக
இதில் யானை என்ற படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து ஹரி மற்றும் அருண் விஜய் முதல் முறையாக இந்த படத்தில் இணைந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆக்ஷன் கதைகளை பிசிறு தட்டாமல் எடுத்து அதில் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் ஹரி தனது வழக்கமான ஆக்ஷன் பார்முலாவில் இந்த யானை படத்தையும் இயக்கி வருகிறார். இராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

இரண்டாவது முறையாக இணைகின்றனர்
அருண் விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இருவரும் ஏற்கனவே மாஃபியா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இப்பொழுது இரண்டாவது முறையாக இணைகின்றனர். மேலும் ராதிகா சரத்குமார், கேஜிஎஃப் பட வில்லன் ராமச்சந்திர ராஜீ, குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி ,தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

யானை டீஸர்
ஆக்ஷன் கதை களத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டீஸர் எப்போது வெளியாகிறது என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி யானை டீஸர் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது என்ற தகவல் கசிந்துள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











