அடித்து நொறுக்கிய அருண் விஜய்.. மிஷன் சாப்டர் 1 மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி தியேட்டரில் வெளியானத் திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இப்படத்தில எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்று பார்க்கலாமா?
தமிழ் சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு கலைஞரும் எப்படியாவது சாதிக்க வேண்டும் என துடித்து வரும் நடிகர் தான் அருண்விஜய். இவர், சூர்யா, கார்த்தி, தனுஷ் இவர்களுக்கு முன்பாகவே சினிமாத் துறையில் வந்துவிட்டாலும், அவருக்கென்று சரியான கதை அந்த நேரத்தில் அமையாததால் கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்ற காரணத்தினால் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

அதன் பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவருக்காக படைக்கப்பட்ட கதாபாத்திரம்தான் விக்டர். என்னை அறிந்தால் படம் அருண் விஜயின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதுவும் வில்லன் அவதாரத்தில் நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டினார். அதிலிருந்தே தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார்.
மிஷன் சாப்டர் 1 படத்தின் கதை: அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் 'மிஷன் சாப்டர் 1'. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. மகளின் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய் மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு நாள் குறிக்கிறார்கள். அந்த மருத்துமனையில் இருக்கும் கேரள செவிலி நிமிஷா சஜயன் அவர்களுக்கு உதவுகிறார். இந்த நேரத்தில், ஒரு கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார் அருண் விஜய்.
நடந்தது என்ன: இதனால், சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது சிறையைஹேக் செய்யும் தீவிரவாத கும்பல் ஒன்று, அங்கிருக்கும் தங்கள் ஆட்களைத் தப்பிக்க வைக்கும் முயற்சி செய்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட அருண் விஜய், அந்த தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க களம் இறங்குகிறார். அதை அவரால் செய்ய முடிந்ததா? மகளின் அறுவை சிகிச்சை என்ன ஆனது என்பதுதான் மிஷன் சாப்டர் 1 படத்தின் கதை. இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி நடித்திருக்கிறார் நடிகர் அருண் விஜய்.
மொத்த வசூல்: பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான போதும், அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படம் அதிகபடியான தியேட்டரில் வெளியாகவில்லை என்றாலும், இந்த படத்திற்கு நல்ல விமர்சனமே மக்களிடமிருந்து வந்துள்ளது. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
வணங்கான்: நடிகர் அருண் விஜய், தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் மற்றொரு கையில் விநாயகர் சிலைகளை வைத்திருந்தது சர்சையை ஏற்படுத்தியது. அந்த படம் அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











