பாலியல் தொழிலாளிகளாக நடிக்கும் அருந்ததி, ஸ்ரேயா, வீணா மாலிக்
சென்னை: பாலியல் தொழிலாளிகளைப் பற்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படங்கள் தயாராகி வருகின்றது.
பாலியல் தொழிலாளி வேடம் மிகவும் சவாலானது என்று கூறி அதில் நடிக்க பல நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற கதாபாத்திரங்களில் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த மெனக்கெடுகின்றனர்.
குடும்பப் பாங்கான சினேகா கூட பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறாரே. உயரமான நாயகி அனுஷ்காவும் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளில் 3 நடிகைகள் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகின்றனர்.

நேற்று இன்று
தமிழில் எடுக்கப்பட்டு வரும் நேற்று இன்று என்ற படத்தில் அருந்ததி பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார்.

பவித்ரா
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் பவித்ரா படத்தில் ஸ்ரேயா பாலியல் தொழிலாளியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கிவிடும் என்று ஸ்ரேயா நம்புகிறார்.

முத்தம் தர வா
இந்தியில் ஜிந்தகி, தமிழில் முத்தம் தர வா என்ற பெயரில் தயாராகி வரும் படத்தில் கவர்ச்சிக்கு பெயர்போன வீணா மாலிக் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











