Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 05 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் விடா முயற்சிக்கான வெற்றியை பெற போகிறார்கள்...
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்தடுத்து 2 பிரபல தெலுங்கு நடிகர்கள் உயிரழப்பு.. 1200 படங்களில் நடித்த சலபதி ராவ் காலமானார்
ஹைதராபாத்: பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 78. டோலிவுட்டில் அடுத்தடுத்து இரு பழம்பெரும் நடிகர்கள் உயிரிழந்தது தெலுங்கு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த டிசம்பர் 23ம் தேதி 700 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் தெலுங்கு நடிகர் கைகாலா சத்யநாராயணா காலமானார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு டிசம்பர் 24ம் தேதி இன்னொரு பழம்பெரும் நடிகர் சலபதி ராவ் காலமானது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் காலமானார்: அடுத்தடுத்து சோகம்... ரசிகர்கள் அதிர்ச்சி

சலபதி ராவ் காலமானார்
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் சலபதி ராவ் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 78. சலபதி ராவ் உயிரிழந்த தகவலை இன்று காலை தான் அவரது குடும்பத்தினர் தெரியப்படுத்தினர். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சலபதி ராவ் சினிமாவில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.

1200 படங்கள்
கூடாச்சாரி, சாக்ஷி, டாக்டர் பாபு, அக்பர் சலீம் அனார்கலி, பிரேம கனுகா, சக்தி, கெளரி, தைரியம், கோடாவா, ரூலர், அருந்ததி, பங்காரராஜு உள்ளிட்ட 1200க்கும் அதிகமான படங்களில் நடித்து அசத்தியவர் சலபதி ராவ். தயாரிப்பாளராக கலியுக கிருஷ்ணடு, கடபரேடம்மா, ஜகநாடகம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை அவர் தயாரித்தும் உள்ளார்.

மகனும் தயாரிப்பாளர்
நடிகரும் தயாரிப்பாளருமான சலபதி ராவின் மகன் ரவி பாபுவும் பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகினரும் சலபதி ராவின் உயிரிழந்த செய்தியை அறிந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 பிரபலங்கள்
கடந்த டிசம்பர் 23ம் தேதி 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் கைகால சத்யநாராயணா உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று இரவு இன்னொரு பிரபல மூத்த தெலுங்கு நடிகர் சலபதி ராவ் உயிரிழந்தது தெலுங்கு திரையுலகையே மொத்தமாக சோகக் கடலில் மூழ்கச் செய்துள்ளது.

பிரபலங்கல் இரங்கல்
வாரிசு இசை வெளியீட்டு விழாவை நேற்று மாலை கோலாகலமாக நடத்தி முடித்த தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் மறைந்த மூத்த நடிகர் சலபதி ராஜுவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் சலபதி ராஜுவின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.