பட்டு வேஷ்டி சட்டையில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் அருண்விஜய்!

சென்னை : குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அறிவழகன் உடன் அருண் விஜய் இணைந்துள்ள படத்திற்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வெற்றி வலம் வந்துகொண்டிருக்கும் அருண்விஜய் தெலுங்கு சினிமாவிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் கொண்ட அருண்விஜய் இப்பொழுது பட்டு வேஷ்டி சட்டையில் குடும்பத்துடன் எடுத்த செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

வில்லன் ரோலில்

வில்லன் ரோலில்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு உள்ளார். பல தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு என்னை அறிந்தால் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய அதில் இவர் வில்லன் ரோலில் பட்டையை கிளப்பியிருப்பார்.

இரண்டாவது இன்னிங்சை

இரண்டாவது இன்னிங்சை

குற்றம் 23, தடம்,செக்கச்சிவந்த வானம் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களின் பட்டியலில் இப்போது அருண்விஜய் இணைந்துள்ளார். இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கி கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக உள்ளார்.

ஆக்சன் படமாக

ஆக்சன் படமாக

நெருங்கிய உறவுக்காரர் என்றாலும் இன்று வரை இயக்குனர் ஹரியுடன் இணைந்து பணியாற்றாமல் இருந்த அருண் விஜய் முதல்முறையாக கூட்டணி அமைத்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹரியின் ஸ்டைலில் பக்கா ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது தவிர அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் மற்றும் பார்டர் போன்ற படங்களில் அருண் விஜய் வரிசையாக நடித்துக் கொண்டுள்ளார்.

பட்டு வேஷ்டி சட்டையில்

பட்டு வேஷ்டி சட்டையில்

அருண் விஜயை தொடர்ந்து அவரது மகன் அர்ணவ் இப்பொழுது சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் கொண்ட அருண் விஜய் செம க்யூட்டான குரூப் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அப்பா விஜயகுமார், மனைவி ஆர்த்தி, மகன் அர்ணவ் மற்றும் மகள் பூர்வி ஆகியோருடன் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X