twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்தியத் தேவனுடன் களமிறங்கத் தயாரான அருண்மொழி வர்மன்.. ட்விட்டரை சுவாரஸ்யமாக்கிய டீம்!

    |

    சென்னை : நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்களுடன் தன்னுடைய கனவு பிராஜெக்ட்டில் களமிறங்கியுள்ளார் மணிரத்னம்.

    இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது.

    படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை மிகவும் பிரம்மாண்டமான அளவில் வெளியான நிலையில், படத்தின் ப்ரமோஷனை படக்குழு தற்போது துவங்கவுள்ளனர்.

    Work from Home-க்கு அனுமதி கேட்ட வந்தியத் தேவன்: ட்விட்டரை அலற விடும் பொன்னியின் செல்வன் டீம்Work from Home-க்கு அனுமதி கேட்ட வந்தியத் தேவன்: ட்விட்டரை அலற விடும் பொன்னியின் செல்வன் டீம்

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்

    நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என கலக்கல் காம்பினேஷனில் தன்னுடைய கனவு பிராஜெக்ட்டான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை 150 நாட்களில் அவர் இயக்கி முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    30ம் தேதி ரிலீஸ்

    30ம் தேதி ரிலீஸ்

    இந்தப் படம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில்,படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

    சிறப்பு விருந்தினர்கள்

    சிறப்பு விருந்தினர்கள்

    சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரபலங்கள் சூழ நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் ஜாம்பவான்களான கமல் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    பழமையான இசைக்கருவிகள்

    பழமையான இசைக்கருவிகள்

    ஏஆர் ரஹ்மான் இசையில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகி அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்திற்காக சோழர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த இசைக்கருவிகளை தேடிக் கண்டுபிடித்து அவர் பயன்படுத்தியுள்ளார். இது இந்தப் பாடல்களின் மீதான எதிர்பார்ப்பையும் மரியாதையையும் கூட்டியுள்ளன.

    பிரமோஷனை துவக்கிய டீம்

    பிரமோஷனை துவக்கிய டீம்

    படம் இன்னும் இரு வாரங்களில் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனை படக்குழு துவக்கவுள்ளது. படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், தஞ்சைக்கு வருவதாகவும், குந்தவை, வந்தியத்தேவன், அருண்மொழி ஆகியோர்களும் உடன் வருகிறார்களா என்று கேட்டிருந்தார்.

    கார்த்தியின் குறும்பு

    கார்த்தியின் குறும்பு

    இதற்கு வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தி குறும்புடன் தான் களைப்பாக உணர்வதாகவும் வொர்க் ப்ரம் ஹோமில் வேலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் இளவரசியிடம் பேசி சாரி சொல்லிவிடுவதாகவும் பதிவிட்டிருந்தார். இதற்கு சரிதான் இளைப்பாறு நண்பா என்று விக்ரமும் பதிலளித்துள்ளார். இவர்களின் இந்த உரையாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஜெயம் ரவியும் பதில் ட்வீட் செய்துள்ளார்.

    ஜெயம் ரவி ட்வீட்

    ஜெயம் ரவி ட்வீட்


    தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்றும் இதோ தானும் வந்தியத்தேவனுடன் வந்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். கூடவே என் அண்ணனை வீழ்த்தவும் வெல்லவும் யாராலும் இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவும் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

    கேரக்டர்களாக மாறிய நடிகர்கள்

    கேரக்டர்களாக மாறிய நடிகர்கள்

    இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், ட்விட்டரில் தங்களது பெயர்களை நீக்கிவிட்டு குந்தவை, ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன் என பொன்னியின் செல்வன் படத்தில் தங்களது கேரக்டர்களின் பெயர்களை இவர்கள் இணைத்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    English summary
    Arunmozhi varman wants to join Vanthiyathevan and even with Kunthavai for the call of Aditha karikalan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X